டிக்கட் விலை குறைக்கத் திட்டம் சொல்லும் திரையரங்க உரிமையாளர்கள்

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது
 
கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
 
முதலில் மூடப்பட்ட தனித் திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை
 
அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்கத் தொழில் அரசுக்குப் பெரும்  வருவாய் தரக்கூடியது இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது
 
திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000 தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று, 
 
திரையரங்குத் தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என “தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்” வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில், 
 
‘திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்
 
அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டுட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்புப் பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்
 
தற்போது கொரானா ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள்  விலையேற்றம் பெற்றுள்ளன
 
இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில்திரைப்படங்களைக் கண்டுகளிப்பதுதான்.  சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பன செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்
 
இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கக் கூடிய திரையரங்குத் தொழிலைப் பாதுகாக்கவும், 
 
பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்கவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்
 
தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது . இவற்றில் தனித் திரையரங்குகள் 700. இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட மால், மல்டிபிளக்ஸ்  ஆகியவை 300 .
 
தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8%ஐ,  முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம் 
 
இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கட் கட்டணம் குறையும். அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாகப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு எனஅனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்
 
தனித் திரையரங்குகளுக்கான GST வரியை 5%சதவிகிதமாகக் குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்
 
இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்கு தற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு வரி மறுப்பு(no input tax credit) முறையை அமுல்படுத்த வேண்டுகிறோம்.
 
இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது 100க்கு விற்பனைசெய்யப்படும் (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாயாக 5% GSTயுடன் சேர்த்து குறையும்.
 
இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்.
 
மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம்.
 
தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனித் திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 15% பார்வையாளர்கள்  அளவில்தான் வருகை இருந்தது.
 
மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும்.
 
 இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்குக் குறைவாகவே வருவார்கள். இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் திரையரங்குத் தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்
 
தற்பொழுது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகை தர வேண்டுகிறோம்
 
மேலும் தற்பொழுது முழு முடக்க காலம்வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம் தொழில் துவங்கிய பிறகு திரைத்தொழில் சகஜ நிலை திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகைதர வேண்டுகிறோம்
 
தமிழகத்தில் கிராமங்கள் சிறு நகரங்களில் கெளரவத்திற்காக காலங்காலமாக இயங்கி வரும் தனித் திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர  வேண்டுகிறோம் ‘என்று கூறப்பட்டுள்ளது. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *