திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ’கோப்ரா’ ரசிகர்கள் சந்திப்பு

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில்   ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம்  ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 
ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகும்  இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
 
இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன்  கலந்துரையாடினர். 
இவ்விழாவினில் நடிகை மீனாட்சி  பேசும்போது, ” விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார் அது அவரிடத்தில் மிகவும் பிடிக்கும். “என்றார். 
 
நடிகை மிருணாளினி பேசும்போது, ” முதலில் விக்ரம் சாருடன் நடிப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் ரசிகையாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும் “என்றார். 
 
நடிகை ஸ்ரீநிதி  ஷெட்டி பேசும்போது, ” தமிழில் எனக்கு முதல் படம், படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக சிறப்பான படைப்பாக வந்துள்ளது. உஙகள் அனைவருக்கும் பிடிக்கும். “என்றார்.
நடிகர்  சீயான் விக்ரம் பேசும்போது, ” நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன் அப்போதே செண்ட்ஜோசப் கல்லூரி பிடிக்கும் இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ’கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது.  உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது அதைத் தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப் படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ஃப்ரெஷ்ஷான படமாக இருக்கும்.  உங்கள் ஆதரவை தாருங்கள். “என்றார் 
 
நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரம் அவர்களின் உருவப்படம் வரைந்த பெயிண்டிங்கை பரிசாக அளித்தார்கள்.
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *