காமெடியில் களம் இறங்கும் ‘கதாநாயகன்’

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப் போல மீண்டும் ஒரு காமெடி கதகளியோடு களம் இறங்குகிறார் விஷ்ணு விஷால்.

அவரே தயாரித்து கதாநாயகனாக நடிக்க , நாளை ( 8– 9– 2017) திரைக்கு வரும் அந்தப் படத்தின் பெயர் ‘கதாநாயகன்’ .

நாயகி கேத்தரின் தெரசா . உடன் ஆனந்தராஜ் , சூரி, சரண்யா பொன்வண்ணன் , நான் கடவுள் ராஜேந்திரன், நடராஜ் 

காஷ்மோரா , மரகத நாணயம் படங்களில் காமெடியில் கலக்கிய முருகானந்தனம் இயக்கி இருக்கும் படம் இது . ஒளிப்பதிவு :லக்ஷமன் .
 
இசை: வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரும்  சரித்திரம் படைத்த வரலாற்று நாவல் ஆசிரியர் சாண்டில்யனின் பேரனுமான சான் ரோல்டன் .
 
இவரது இசைத் திறமை நடிகர் தனுஷ் வியந்து பாராட்டும் விஷயம் .
 
“இவன் காமெடிக் கதாநாயகன்தான் . ஆனாலும் கதாநாயகன் ! தனக்கு வர வேண்டிய மருமகன், வாழ்க்கையில் ஒரு நிஜ   ஒரு ஹீரோவாக இருக்க வேண்டும்,
 
 என்று எண்ணுகிற மாமனார், அதற்கேற்ற ஒரு தைரியமான மகள் …! ஆனால்  இந்த மகளைக் காதலிக்கும் காதலனோ,
 
 

                                                                                                                   இயக்குனர்   முருகானந்தம்

எந்தப் பிரச்னை என்றாலும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி நிற்பவன் . இவன் எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதுதான் படம் .

 
அதனால்தான் படத்துக்கு அந்த பெயர் ” என்று ஒன் லைனை கன் (Gun) லைனாக  சொல்கிறார் இயக்குனர் முருகானந்தம் . 
 
“இதை வித்தியாசமான கதாபாத்திரங்கள் , வித்தியாசமான நிகழ்வுகள் மூலம் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம்.
 
 
உதாரணமா மொட்டை ராஜேந்திரன் ஒரு பெரிய பாடகர் . அவர் குரலுக்கு அவரை பாடகரா யோசிச்சு பாருங்களேன் .
 
என்ன கலாட்டா நடக்கும்னு தெரியும்  ” என்று உரையாடலில் இயல்பாக கலக்கிறார் விஷ்ணு விஷால் . 
 
படத்தில் மாமனாராக நடித்துள்ள நடராஜ் நிஜத்திலும் விஷ்ணு விஷாலின் மாமனார் . “சூட்டிங் ஸ்பாட் அல்லோலகல்லோலப் பட்டிருக்குமே ?” என்று கேட்டால்,
 
 “படத்தில் சில காட்சிகளில் மாமனார் சொன்னதைக் கேட்டு விஷ்ணு சார் தலைகுனிந்து போவது போல வரும் .
 
 
‘ஏனப்பா இப்படி எல்லாம் சீன்? . நிஜத்தில் என் மருமகன் அப்படி  தலை குனியற  ஆள்இல்லப்பா ‘ என்று நடராஜ் சார் பெருமையா  சொல்வார் ” என்கிறார் முருகானந்தம் .
 
“இவ்வளவு லைட்டான பிரீக் அவுட்டான காமெடி நிறைந்த கேரக்டரில் இதுவரை நான் நடித்ததே இல்லை . இது எனக்கே புது அனுபவம் .
 
அதனால் இந்தப் படத்துக்கு நானும் ஆவலா காத்துட்டு இருக்கேன் ” என்றெல்லாம் ….  வேறு  யார் சொல்ல முடியும் .. கேத்தரின் தெரசாவைத் தவிர ! 
 
 
பவர் பாண்டி படத்தில் இசையையே ஒரு மொழியாக மாற்றி நெகிழ்த்தியவரும் , வி ஐ பி 2 படத்துக்கு பெரும்பலமாக இருந்தவருமான சான் ரோல்டன் என்ன சொல்கிறார் ?
 
“இசையில் எவ்வளவோ சாதனைகள் படைத்த பெருமை  நம்ம தமிழ் சினிமாவுக்கு உண்டு . காரணம் நம்முடைய இசைக்கு அவ்வளவு பெரிய பாரம்பரியம் உண்டு .
 
என்னைப் பொறுத்தவரை அந்த பாரம்பரியத்தை –  பெருமையை தொலைச்சுட்டு முழுக்க முழுக்க சம்மந்தம் இல்லாத,
 
 

                                                                                                    இசையமைப்பாளர் சான் ரோல்டன்

அந்நிய இசையைப் போட்டு நிரப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை . அதற்கேற்பவும் , இந்தப் படத்தின் தன்மைக்கு ஏற்பவும்,

 
 இந்தப் படத்துக்கு இசை கொடுக்க முடிஞ்சுது . எல்லோருக்கும் பிடிக்கும்” என்கிறார்  . 
 
“காமெடி படங்களில் ஒளிப்பதிவாளருக்கு என்ன பெரிதாக வேலை ? பொம்மை பிடிப்பதுதானே ? “என்று லக்ஷ்மனை சீண்டினேன் .
 
“கிடையவே கிடையாது . எப்படி வசனத்தில் முக பாவனையில் சூழலில் காமெடி வருகிறதோ.. எப்படி இசையில் காமெடியைக் கொண்டு வர முடியுமோ …
 
                                                                                             ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன்

அப்படி கேமரா நகர்வுகள் , இருள் – ஒளி பயன்பாடு , டோன் இவற்றிலும் காமெடியைக் கொண்டு வர முடியும் .

 
இந்தப் படத்தில் அப்படி சில முக்கியமான கேரக்டர்களுக்கு தனித் தனி டோன் கொடுத்துள்ளேன் . அதுவும் காமெடி உணர்வை கூட்டும் ” என்கிறார்  லக்ஷ்மன் . 
 
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் ரசிகர்களுக்கு கொடுத்த அதே சந்தோஷத்தை இந்தப் படமும் கொடுக்கும் “- இது விஷ்ணு விஷால் . !
 
அப்படியே ஆகட்டும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *