மாய மோகினி @ விமர்சனம்

கண்ணன் கிரியேஷன்ஸ் சார்பில் தங்கவேலு தயாரிக்க, குஷ்பூவின் சகோதரரான அப்துல்லா , சாரிகா, ஜோதிஷா, இமான் அண்ணாச்சி ,

இவர்களுடன் கே ஆர் விஜயா ஆகியோர் நடிக்க, ராசா விக்ரம் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் மாய மோகினி . இவள் மயக்குவாளா ? பார்க்கலாம் . 

புடவை வியாபாரியான கிராமத்து இளைஞன் பிரகாஷை (அப்துல்லா) தேடி வான் உலகில் இருந்து இறங்கும் ஒரு மோகினி (சாரிகா) ,
 
‘நாம் பல பிறவிக் காதலர்கள்’ என்று சொல்லி  அவனோடு உறவாடுகிறது . அவன் சேலை விற்கப் போன ஊரில் அவனோடு மோகினி வந்து உறவாட ,
 
அந்த ஊர்ப் பெண் யாரையோ பிரகாஷ் மயக்கிவிட்டதாக எண்ணும் ஊர்க் காரர்கள் அவனை அடித்துக் கொன்று விடுகிறார்கள் 
 
அதன் பின் தினமும் இரவில் அந்த ஊருக்கு வரும் மோகினி இரவு முழுதும் அந்த பிணத்தை வைத்துக் கொண்டு அழுவது வாடிக்கை .
இதனால் பல்லாண்டுகளாக அந்த ஊர் மக்கள் பயந்து வாழ்கின்றனர்.  சென்னையில் உள்ள குரு டி வி என்ற தொலைக் காட்சியில் நடக்கும்,
 
 பேய் இருக்கா இல்லையா என்ற விவாதத்தில் பேய் இல்லை என்ற தரப்பு ஜெயிக்கிறது .  முடிவில் பேய் இருக்கு என்று நிறுவினால்,
 
 ஒரு லட்ச ரூபாய் தருவதாக அறிவிக்கிறது அந்த டி வி .
 
மோகினிப் பேய் வரும் அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊரில் பேய் இருப்பதாகச் சொல்கிறார்கள் . 
 
உண்மையா என்று விசாரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும்  நெறியாளரான ஷீலாவும் (ஜோதிஷா)
 
ஒளிப்பதிவாளர் சிவாவும்  (இரண்டாவது வேடம் அப்துல்லா) வருகின்றனர் . இருவருக்குள்ளும் காதலும் வருகிறது .
ஊரில் சிவாவைப் பார்க்கும் ஒரு பெரியவர் (இமான் அண்ணாச்சி )  ,  பிரகாஷ் போலவே சிவா இருப்பதைக் கண்டு ”நீ இங்கு இருந்தால் உன் உயிருக்கே ஆபத்து” என்கிறார் . 
 
அதை மீறி சிவா , ஷீலாவோடு  மோகினியைப் பார்க்கப்போகிறான் , செத்துப் போன காதலன் பிரகாஷ்,
 
 இந்தப் பிறவியில் சிவாவாக வந்திருப்பதை அறிந்த மோகினி  சிவாவை மயக்கி ஷீலாவைக் கொன்று , சிவாவை அபகரித்துப் போக முயல , 
 
பிரகாஷ் மீது அன்பு கொண்டிருந்த பெண் சித்தர் ஒருவர் (கே ஆர் விஜயா) சிவா- ஷீலாவுக்கு உதவிக்கு வர , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் . 
சொல்ல வந்த கதையை எளிய மேக்கிங்கில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
 
 மோகினி என்ற அமானுஷ்யம் பேய் ஆராய்ச்சி என்ற யதார்த்தம் இரண்டையும் இயல்பாக கலந்து சொல்கிறார்கள் . 
 
மோகினி என்பதால் கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லை .  (அது கவர்கிறதா என்பது வேறு விஷயம் )
 
இமான் அண்ணாச்சிதான் நகைச்சுவை என்ற பெயரில் படுத்தி எடுக்கிறார். 
 
ஜெயராஜ் என்பவர் இசையில் பாடல்கள் தெளிவாகப் புரிவது சந்தோசம் . 
 
தொழில்நுட்பம் நடிப்பு  இவற்றில் எப்படி பெரிதாகப் பாராட்ட ஒன்றும் இல்லையோ அப்படியே குறை சொல்லவும் ஒன்றும் இல்லை . 
 
படம் பெரிதாக போரடிக்கவில்லை என்பதையும் பாராட்டலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *