டி பிளாக் @ விமர்சனம்

எம் என் எம் பிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரிக்க, அருள் நிதி, அவந்திகா,  உமா , மற்றும் பலர் நடிப்பில் விஜய் குமார் ராஜேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் . 

 
காட்டுக்குள் கட்டப்பட்டு இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் கொடூரமான முறையில் சாகிறார்கள். புலி அடித்த தடம் போல் இருப்பதால் எல்லோரும் அப்படியே நம்ப, அந்த வருடம் படிக்க வரும் மாணவனின் விசாரணையில் கொல்வது  புலி இல்லை என்பது தெரிகிறது .  புலிக்குப் பதிலாக ஒரு ராட்சஷ பலம் படைத்த சைக்கோ இருந்தால் என்ன ஆகும் என்பதே படம் . 
அட்டகாசமான லொக்கேஷன் , அதை அள்ளிச் சாப்பிடுகிறது அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு . இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார் அருள்நிதி. அவந்திகா தமிழைக் கஷ்டப்பட்டு பேசி இருப்பது தெரிந்தாலும் ஆர்வமாக நடித்துள்ளார் . 
 
கவுசிக் கிரிஷ்சின் பின்னணி இசை அபாரம் . 
 
ஒலி வடிவமைப்பும் ஒலித் தொகுப்பும் அருமை . 
 
பேய்க் கதை போல ஆரம்பித்து புலிக்கு வந்து பின்னர் அடுத்து தடம் மாறுவது சிறப்பு . 
 
பரபரப்பு விறுவிறுப்பு திரில் திகில் என்று படமாக்கி இருக்கிறார்கள்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *