அர்கா மீடியா தயாரிப்பில் இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கியப் பாத்திரத்தில் நடித்து ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் வெளிவந்திருக்கும் படம் ஆன்யாஸ் டுட்டோரியல்
வறுமை மற்றும் சூழல் காரணமாக சிறு வயது முதல் பேய் இருக்கும் வீடுகளிலேயே , தன் தாயுடன் வசித்து வந்த சகோதரிகள் ( ரெஜினா , நிவேதிதா). அக்கா தங்கை இருவருக்கும் ஏழாம் பொருத்தம்.
அக்கா அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டு தனியே விடுதியில் , லாக் டவுன் காரணமாக யாரும் இல்லாத் தனிமையில் இருக்கும் தங்கை நடத்தும் யூ டியூப் சேனலுக்கு அவர் போடும் வீடியோக்களில் பேய் மர்ம உருவங்கள் உலாவுவது பார்வையாளர்களுக்குத் தெரிய வர, அதனால் அவர் யூ டியூப் புகழ் பெற, பணமும் வர, தைரியத்தோடு தங்கை அதை பயன்படுத்திக் கொள்ள , விளைவு என்ன ஆச்சு என்பதே இந்தப் படம்.
பெண் இயக்குனர் என்பதால் பெண்களில் உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளை தனித் தன்மையோடு காட்சிப்படுத்தி இருக்கிறார் .
சிறப்பான இயக்கம் மற்றும் மேக்கிங். தொழில் நுட்பத் தரம் தெரிகிறது
விஜய் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும் ஒலி வடிவமைப்பும் பெரும் பலம்
ரெஜினாவும் நிவேதிதாவும் அட்டகாசமாக நடித்துள்ளனர் .
இன்னும் திரைக்கதை சிறப்பாக இருந்திருக்கலாம்
எனினும் வித்தியாச விரும்பிகளுக்குப் பிடிக்கலாம்