கார்த்திக் நரேனின் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்து வெற்றியையும் நற்பெயரையும் ஒருங்கே பெற்ற படம் “துருவங்கள் பதினாறு”.
வித்தியாசமான திரில்லர் கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் கதாநாயகன் ரகுமானுக்கும் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கேரளாவில் சமூக வலைதளங்கள் மற்றும் ரகுமான் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த வண்ணம் இருந்தது.
இதனால் துருவங்கள் பதினாறு மொத்த கேரளா உரிமையை தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் “Writer Imaginations” உரிமையாளர் மஹாவிஷ்ணு வாங்கினார்.
நாளை மார்ச் 10-ஆம் தேதி மஹாவிஷ்ணு மற்றும் கேரளாவின் முக்கிய விநியோகஸ்தரான ஷிபு தமீன் இருவரும் இணைந்து ,
கேரளாவின் மிக முக்கிய திரையரங்குகளில் துருவங்கள் பதினாறு படத்தை வெளியிடுகின்றனர் .
இந்த வெளியீடு பற்றிய செய்திகள் மற்றும் போஸ்ட்டர்கள் கேரளாவில் மாபெருமளவில் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.



