
தேவி படத்தின் வெற்றி விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக் குழு .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பளர் கணேஷ் , ” பிரபுதேவா , இயக்குனர விஜய் இருவரும் சேர்ந்து எனக்கு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். படத்தை வெற்றிப் படமாகிய அனைவர்க்கும் நன்றி ” என்றார் .
படத்தை வாங்கி வெளியிட்ட அவ்ரா பிலிம்ஸ் மகேஷ் பேசும்போது, ” சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய் செதுபதியின் றெக்க ஆகிய படங்ககுடன் தேவி ரிலீஸ் ஆகும் என்ற நிலை வந்த போது,
எல்லாரும் பயமுறுத்தினார்கள் . நாங்கள் படத்தை நம்பினோம் . ஆரம்பத்தில் இருந்தே சூடு பிடித்த எங்கள் படம் போகப் போக முதல் இடத்துக்கு வந்தது.
ஒரு வெற்றி என்பது எந்த பலமான எதிரிகளை வென்று பெறுகிறோம் என்பதைப் பொறுத்தே மதிப்பிடப் படும்.
அப்படிப் பார்த்தால் சிவ கார்த்திகேயன் , விஜய் சேதுபதி படங்களோடு வந்த எங்கள் படம் பெற்ற இந்த வெற்றி மிகப் பெரிய வெற்றி ” என்றார் .
ஆர் ஜே பாலாஜி தன் பேச்சில் ” மகேஷ் சொன்னது போல சிவா, மற்றும் விஜய் சேதுபதி படங்களுக்குன் இடையே எங்கள் படம் வருகிறது எனும்போது எல்லோரும் கிண்டலாக சிரித்தார்கள் .
ஆனால் இப்போது அது எங்களது வெற்றிச் சிரிப்பாக மாறி இருக்கிறது.
இனி என்ன மாயம் செய்தாய் படத்தில் விஜய்யோடு இணைந்தேன் . அவரது நெருங்கிய நண்பன் ஆனேன்.
விஜய்க்கு இதற்கு முன்போ பின்போ எந்தப் படம் ஓடினாலும் அது வேறு விசயம். ஆனால் இந்தப் படத்தின் வெற்றி மிக முக்கியமானது .
இனி அவர் தொடர் வெற்றிகள் பெறுவார் .ஜெயம் ரவியும் அவரும் இணையும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தேவி என்பது அடிப்படையில் ஹீரோயின் சப்ஜெக்ட் . ஆனால் படம் பார்த்து விட்டு வரும் எல்லோரும் பிரபுதேவா சூப்பர் என்கிறார்கள் . அதுதான் பிரபுதேவா சார் .
படத்தில் எனது நடிப்பும் பாராட்டப்படுவது மகிழ்ச்சி .
நான் நடிக்கும்போது காமெடி என்ற பெயரில் எதையாவது பன்ச் என்ற பெயரில் அடிக்க மாட்டேன் . கேரக்டருக்கு ஏற்றபடி மட்டுமே பேசுவேன் ” என்றார்
இயக்குனர் விஜய் தனது பேச்சில்
” என்னைப் பொறுத்தவரை எத்தனை படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு களம் இருக்கிறது .
ரெமோவும் றெக்கயும் அவற்றுக்கான களங்களில் ஓடுகிறது . எங்கள் படம் அதற்குரிய களத்தில் ஓடுகிறது .
படம் இவ்வளவு வெற்றிகரமாக ஓடுவதற்கு ஐசரி கணேஷ் சாரும் பிரபுதேவா சாரும் காரணம் . தமன்ன சிறப்பாகநடித்தார் . பிரபுதேவா சார் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் ” என்றார்
பிரபு தேவா பேசும்போது,
” படத்தின் வெற்றி என்னை ரொம்ப சந்தோஷப்படுத்துகிறது.
ஓர் இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்த என்னை மனதார ஏற்றுக் கொண்ட அனைவர்க்கும் நன்றி “என்றார்