கலை சினிமாஸ் நிறுவனம் சார்பில் கலைச்செல்வன் தயாரிக்க, சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, பாலாசிங், மனோஜ்குமார், மணிமாறன், மாரிமுத்து, ராகுல் தாத்தா நடிப்பில் விஜய்ஸ்ரீ இயக்கி இருக்கும் படம் தாதா 87 . படம் கோதாவா ? சோதாவா ? பேசலாம்
எந்த வேலைவெட்டிக்கும் போகாமல் இளம்பெண்களைவிரட்டி விரட்டி ‘ஐ லவ் யூ’ சொல்பவர் ‘ஜொள்ளு பாண்டி’ ( ஆனந்த் பாண்டி)
முன்னாள் கவுன்சிலர் பட்டை திருக்குமாரும் ( மணிமாறன்) , தற்போதைய கவுன்சிலர் ஸ்பீடு மோகன்தாசும் (பாலாசிங்) கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம், பவுடர் விற்பனையில் மோதிக் கொள்பவர்கள்
தொகுதியின் எம்.எல்.ஏ.வான மனோஜ்குமார், இவர்கள் இருவரையுமே காலி செய்யக் காத்திருக்கிறார் . மேற்படி மூவருமே பயப்படக் கூடியவர் வயதான தாத்தா தோற்றத்தில் இருக்கும் தாதாவான சத்யா (சாருஹாசன்.)
அந்தப் பகுதிக்கு குடி வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான நாயுடு (ஜனகராஜ). அவரது மகள்தான் நாயகியான ‘ஜெனி’ ( ஸ்ரீபல்லவி). இவரது அழகைப் பார்த்தவுடன் வழக்கம்போல நாயகன், இவர் பின்னாலேயே தீவிரமாகச் சுற்றுகிறார்.
இதையறிந்த நாயுடு போலீஸில் சொல்லி நாயகன் ‘ஜொள்ளு’ பாண்டியை தட்டி வைக்கிறார். இந்நிலையில் திடீரென்று மனம் மாறும் நாயகி, பாண்டியை தானும் காதலிப்பதாகச் சொல்கிறார்.
ஒருநிலையில் தான் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை என்ற உண்மையை நாயகி சொல்ல, நாயகன் பாண்டி ஆளைவிட்டால் போதும் என்று ஓட்டமாய் ஓடுகிறார். ஆனால் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது முடியாது என்றால் எப்படி என்ற கேள்வியுடன் நாயகியும் அவனைத் துரத்துகிறாள்.

கடைசியில் முடிவு என்ன என்பதுதான் இந்த தாதா 87 .
நாயகியாக நடித்த ஸ்ரீபல்லவி மிக அழகாக நடித்திருக்கிறார். திருநங்கையாக தனது முகத் தோற்றத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்ட தருணங்களில் அவருடைய நடிப்பு அழகோ அழகு. படத்தை கடைசிவரை பார்க்க இவரே காரணம் .
நாயகன் ஆனந்த் பாண்டி அந்த வயதுக்கேற்ற நடிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார். காதலிக்கும்போது நடித்ததைவிடவும் நாயகி தான் யார் என்பதை சொன்ன பிறகு அவரிடமிருந்து அவர் தப்பிக்க நினைக்கும் காட்சிகளில் ஒகே
சாருஹாசன் தன்னுடைய 87-வயதில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அவர் நடப்பதற்கே கஷ்டப்படும் சூழலிலும், இந்தப் படத்தில் நடக்க வைத்தே பல காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜை அதே தொனியிலான பேச்சில் பார்க்க முடிந்திருக்கிறது. நாயகியின் தந்தையாக.. மகன், மகளாக மாறியிருப்பதையும் தாங்கிக் கொண்டு அவர் மகளை நேசிக்கும் காட்சிளில் நெகிழ்வு . . மகளைச் சமாதானப்படுத்தும் காட்சியில் ஜனகராஜின் நடிப்பு நெகிழச் செய்கிறது.
சாருஹாசன் அவ்வப்போது கண்களை உருட்டி பெரிசாகக் காட்டுவதைத் தவிர எதையும் செய்யவில்லை. தள்ளிவிட்டாலே விழுந்துவிடும் அளவுக்கு இருக்கும் இவரைக் கண்டு மற்ற ரவுடிகளெல்லாம் ஏன் பயப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு காரணத்தைக்கூட இயக்குநர் சொல்லவில்லை . ஆனால் இவர்தான் டைட்டில் கேரக்டர்

இவரது காதல் வாழ்வை ‘சத்யா’ படத்தோடு ஒப்பிட்டு, முடியல . பாவம் கமல் .
மனோஜ்குமார் பாலாசிங், மணிமாறன் கதைப் பகுதியால் பலன் இல்லை
ராஜபாண்டியின் ஒளிப்பதிவில் ஹவுசிங் போர்டு காட்சிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். நாயகி திருநங்கையாக மாறிவிடும்போது வரும் காட்சிகளெல்லாம் மிக, மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
முதல் பாதியில் படத்தொகுப்பு பலன் தரவில்லை
மூன்று இசையமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து இசையமைத்தும் பாடல்களால் பலன் இல்லை அதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை.
படத்தின் கதைக்கும் டைட்டிலில் வரும் “பெண்களை அவர்கள் அனுமதியில்லாமல் தொடுவது சட்டப்படி குற்றம்…” என்ற வாக்கியத்துக்கும் என்ன சம்மந்தம்?
படத்தின் முக்கியமான பிரச்சினையே திருநங்கையரின் காதல்தான். ஆனால் இடையிடையே லோக்கல் ரவுடித்தனம் பிரச்சினையையும் சேர்த்து வைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் படம் இன்ன மாதிரியானது என்று சொல்ல முடியாமல் போய்விட்டது.
படமோ காதல் படம். திருநங்கையைக் காதலிப்பது சரியா.. தவறா.. அது நடைமுறை சாத்தியமா.. அதில் காதல் இருக்குமா.. இருக்காதா.. என்பதையெல்லாம் தெளிவாக பேசியிருக்க வேண்டிய படம்.. ஆனால் அதை செய்யவில்லை
“வெறும் ஐஞ்சு நிமிஷ சுகத்துடன் உன் காதல் முடிஞ்சிருதில்ல” என்று நாயகனைப் பார்த்து நாயகி கேட்கும் ஒரேயொரு கேள்விதான் இந்தப் படம் சொல்லும் முக்கிய செய்தி . ஆனால் அதற்கு ஏற்ற திரைக்கதை இல்லை
