”நான் எத்தனையோ படங்களில் நடித்து இருக்கிறேன் ; ஆனால் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல்” என்கிறார் கருணாஸ் .
எந்தப் படம்?
கலாமாயா பிலிம்ஸ் சார்பில் ஜிதேஷ் தயாரிக்க, நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், பூர்ணிமா பாக்கியராஜ், ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் சஜீவ் பழூர் எழுதி இயக்கி இருக்கும் என்ன விலை என்ற படம். சாம் சி எஸ் இசை. அல்பி ஆண்டனி ஒளிப்பதிவு.ஸ்ரீஜித் சாரங் படத் தொகுப்பு.
ராமேஸ்வரம் பகுதியில் வாழும் ஏழை மீனவக் குடும்பம், குடிசையும் மணலுமாக வாழும் அவர்கள் வாழ்க்கை, அங்கு வரும் பக்தர்களின் பூஜைகளுக்கு அகத்திக்கீரை விற்கும் தொழில் என்று குடும்பங்கள்,நபர்கள், உறவுகள்… பாவம் தீர்க்க கடலில் குளித்து விட்டு, எதாவது அங்கே விட்டு விட்டுப் போக வேண்டும் என்று ஆடைகளை விட்டுவிட்டு வரும் பக்தர்கள் …
இதை சூழலில் ஓர் எளிய குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், இழப்புகள், அதன் விளைவுகள் தேசிய அளவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு வழி வகுக்கிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.
வக்கீலாக, ”கண்கள் ஏதோ பேச… ”என்று கண்களால் பேசிய நிமிஷா சஜயன் நடிக்கிறார் டிரைலரில் வக்கீலாக கருப்பு கோட் போட்டு கொண்டு முறைக்கிறார்.
டிரைலரில், பாதிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவராக வரும் காட்சிகளில் உருக வைக்கிறார் கருணாஸ் . மற்றும் சில, பேர் அறியாத நடிகர்களிடம் கூட சிறப்பாக வேலை வாங்கி இருக்கும் இயக்குனர் சஜீவ் பழூர் மலையாளத்தில் பல படங்களுக்கு எழுதியவர்.
நிமிஷா சஜயனின் முதல் படமான தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் (திருடப்பட்ட பொருளும் சாட்சியும்) என்ற படத்தின் கதை திரைக்கதை ஆசிரியர் இந்த சஜீவ் பழூர்தான். தான் இயக்கும் படத்துக்கு நிமிஷா சஜயனை கொண்டு வந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும்?
ஆனால் சஜீவ் பழூர் இயக்கும் முதல் படம் இதுதான் . ” நான் மலையாளியாக இருந்து மலையாளத்தில் பல கதைகளுக்கு எழுதி இருந்தாலும் எனது முதல் படம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.. எனது பிள்ளைகள் இங்குதான் படிக்கிறார்கள்.
இந்தக் கதை முடிவான உடன் நான் கருணாஸ் சாரை பார்த்துதான் சொன்னேன். அவர் பிரமாதமாக நடித்து இருக்கிறார் . ராமேஸ்வரம் நேட்டிவிட்டியுடன் படமாக்கி இருக்கிறேன்.” என்றார் .
இந்தப் படத்தில் நானே தமிழில் டப்பிங் பேசி இருக்கிறேன் . கோர்ட் வசனங்கள் சாதாரணமாக பேசும் தமிழ் போல ஈசியாக இல்லை . எனினும் அசோசியேட் டைரக்டர்கள் உதவியால் நன்றாக பேசினேன்” என்கிறார்
ஆரம்பத்தில் எனக்கு படம் தயாரிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை.ஆனால் கதை பிடித்துப் போக, நானே தயாரிப்பாளர் ஆனேன் ” என்கிறார் ஜிதேஷ்.
” காமெடியாக எவ்வளவோ படங்களில் நடித்து விட்டேன். படங்களை தயாரித்து இயக்கி லாபம் நஷ்டம் எல்லாம் பார்த்தேன்.கொஞ்ச நாள் அரசியலுக்கு போய் சினிமாவை விட்டு விலகி இருந்தேன் . ஆனால் சினிமா என்னை கை விடவில்லை. மீண்டும் வந்தேன். இப்போதும் பிஸியாக இருக்கிறேன் . நிறைய படங்களில் நான் நடிக்கிறேன்.
ஆனால் எனக்கு என்றும் பேர் சொல்லும் படங்கள் என்று இருக்குமில்லையா, போகும் இடம் வெகு தூரமில்லை மாதிரி ? அப்படி பின்னாளில் என் பேர் சொல்லும் படம் என்று நாலு படம் இருக்குமில்லையா? அதில் இந்த என்ன விலை படமும் இருக்கும் ” என்கிறார்.
என்னடா இப்படி சொல்கிறாரே ; படம் எப்போது ரிலீஸ் என்று கேட்டால், இரண்டு வாரத்தில் வர நினைச்சோம். இப்போ ஜனநாயகன் வந்து போகட்டும் என்று காத்திருக்கிறோம் ” என்கிறது படக்குழு.
சி எம் சார்..