
100க்கு 100 மார்க் தரலாம் என்று ‘துருவங்கள் பதினாறு ‘ படத்தை இயக்குநர் சுந்தர்.சி பாராட்டியுள்ளார்.
பரபரப்பாகப் பேசப்படும் ‘துருவங்கள் 16 ‘ படத்தை
முன் திரையீட்டுக் காட்சியில் படத்தைப் பார்த்த பல விஐபிக்களும் படத்தைப் புகழ்கிறார்கள். இயக்குநரைப் பாராட்டுகிறார்கள். படத்தின் ஊகிக்க முடியாத சவாலான திரைக்கதையை வியந்து பாராட்டுகிறார்கள். அவர்களில் ஒருவர் இயக்குனர் சுந்தர் சி
படம் பற்றி அவர் கூறுகையில் ” இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம்.
புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமை. படம் ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது. யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் அற்புதம்.
எவ்வளவு முயன்றும் ஊகிக்க முடியாத அளவுக்கு சஸ்பென்சாக படத்தைக் கொண்டு போய் இருக்கிறார்கள்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும்.இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும்.படக் குழுவுக்கு பாராட்டுகள்” என்கிறார் சுந்தர் சி