மாநகரம் என்கிற ஒரே படம் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கியுள்ள கைதி தீபாவளியை ஒட்டி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது .
இப்போது தமிழகமே எதிர்பார்க்கும் விஜய்64 படத்தை இயக்கி வருகிறார்.
கைதி படவெளியீட்டை முன்னிட்டு ர் பத்திரைகையாளர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ்
“மாநகரம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள்தான். கைதி முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் அப்போது உங்களை சந்திக்க முடியவில்லை. இப்போது தீபாவளி வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன் ” என்றவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் !
இந்தப் படத்தில் ஏன் ஹிரோயின் இல்லை ?
இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.
மாநகரம் , இப்போது கைதி இரு படங்களும் இரவில் நடக்கிறதே.. இரவின் மீது அப்படி என்ன காதல் ?
கைதியில் கார்த்தி ?
படத்தில் கார்த்தியை மையப்படுத்திதான் கதை. ஹிரோயின் இல்லை எனும் போது அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும். இந்தப் படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல இருப்பதாக சொன்னார்கள்.
பாதிப்பு இல்லை . ஆனால் டை ஹார்ட் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம்.
படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லையா ?
பெண் கதாபாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். கதாநாயகிக்கான தேவை இல்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப்படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை அவ்வளவு தான்.
இரவில் ஷூட் செய்தது எப்படி இருந்தது ?
இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம் இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். கார்த்தி சார் தான் ரொம்ப கஷ்டபட்டார் . பெரும்பாலும் இரவு ஒரு மணிக்கு மேல்தான் வசனம் பேசுவது , அழுது நடிப்பது , சண்டை போடுவது என்று வரும் . ரொம்ப கஷ்டம் அது. நல்ல டீம் அமைந்தது.
விஜய் 64 என்ன மாதிரி படம் ?
அந்த படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன்
விஜய் கைதி பார்த்து விட்டாரா ?
இன்னும் பார்க்கவில்லை.
தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. இரண்டுமே ஜெயிக்க வேண்டும்தான். “பிகில்”, “கைதி” இரண்டும் பாருங்கள்.

