ஆண்டின் இறுதி நாளில் 11.25 கோடி வசூலித்து சாதனை படைத்த ‘டங்கி’

புதிய ஆண்டு பிறந்து விட்டது.  டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது.  படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல்,  ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெற்று வருகிறது இப்படம். இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவதுடன், புத்தாண்டு கொண்டாட்டமாக கடந்த  ஞாயிற்றுக்கிழமை அட்டகாசமான வசூலைக் குவித்துள்ளது.
 
இந்த ஆண்டின் இறுதி நாளில் இரட்டை இலக்கத்தில் கோடிகளை குவித்துள்ளது   இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி.  டிசம்பர் 30 சனிக்கிழமை  அன்று 9 கோடியை ஈட்டியது.; டிசம்பர் 31 ஞாயிறு அன்று இப்படம் 11.25 கோடி வசூல் செய்தது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இந்த விடுமுறை காலத்தை கொண்டாட,  குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது. உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டேடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம்  இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.
 
டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *