ஜெய், பிரணிதா, கருணாகரன், நவீன், தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட், உள்ளிட்ட முப்பத்தாறு (கதாபாத்திரங்களில்) நடிகர்கள் நடிக்க,
சந்தானத்தோடு லொள்ளு சபாவில் பணியாற்றிய மகேந்திரன் ராஜாமணி இயக்கி இருக்கும் படம் எனக்கு வாய்த்த அடிமைகள் .
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகர் எஸ். வி. ராமதாஸ் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்; ஆனால் வாய்தான் காதுவரை நீள்கிறது” என்று சொல்வாரே, அந்த வசனத்தின் பாதிப்பில் வைத்த பெயர்.
படத்தின் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டனர் .
” தூக்க மாத்திரை போட்டியா ? “
“ம்ம்ம்…. இங்கதான் எங்கயோ போட்டேன் . எங்க விழுந்ததுன்னு தெரியல “
மற்றும்
“அப்ப இன்டரஸ்டிங்கா இருக்கும் . சொல்லுங்க “
இது போன்ற நகைச்சுவைகளில் எனக்கு வாய்த்த அடிமைகளின் முன்னோட்டம் சுறுசுறுக்கிறது.
படத்தின் ஒரு பாடலை கொடைக்கானலில் மிக அழகாகப் படமாக்கி இருந்தார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி .
இன்னொரு பாடலில் காதலில் தோற்ற நாயகனின் பிரச்னையை தீர்க்க அவனது நண்பர்கள் தமிழக தொலைக்காட்சிகளின் முக்கிய டாக் ஷோக்கள் (போன்ற மாதிரி நிகழ்சிகள்)
இந்தப் பாடலை “மண்ணெண்ன.. வேப்பெண்ண , வெளக்கெண்ண , நீ எக்கேடு கெட்டாக்க எனக்கென்ன ?” என்று துவங்கி இருப்பதற்குப் பதில் ,
“வேப்பெண்ண மண்ணெண்ன..வெளக்கெண்ண , நீ எக்கேடு கெட்டாக்க எனக்கென்ன ?” என்று துவங்கி இருந்தால் இன்னும் ரைமிங் ஆகவும் ஸ்மூத் ஆகவும் அமைந்து இருக்கும்
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஷான் சுதர்சன்
நடிகர் கருணாகரன் பேசும்போது ” இப்ப இந்தியாவுல எது கஷ்டமான வேலையோ அந்த கேரக்டரில் நான் நடித்துள்ளேன்.
அதாவது பேங்க் மேனேஜர் வேலை ” என்று சிரிக்க வைத்தார்.(லட்ச லட்சமா சம்பாதிக்கிற வேலைகூட கருணா )
காளி வெங்கட் ” படத்தில் ஒரு முக்கியமான ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் . எல்லோரையும் கவரும் படமாக இது வரும் ” என்றார் .
படம்னா நல்ல ஜாலியா இருக்கணும் . அப்படிப்பட்ட படத்தைதான் நான் பார்ப்பேன் . . அப்படிப்பட்ட படத்தைதான் நான் இப்போ எடுத்து இருக்கேன்
காதல் தோல்வி அடைந்த ஒருவனின் வேதனை அவனது நிஜமான நண்பர்களை எப்படி பாதிக்கிறது என்பதே இந்தப் படம் அடிமை என்றால் ஹீரோவின் நண்பர்கள்.. அனைவரும் அன்பின் அடிமைகள் .
எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்த தயாரிப்பளருக்கு நன்றி . ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமின் எனக்கு வழிகாட்டியாக இருந்தார் .
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை வேறு எங்கும் பார்க்க முடியாது .
டூயட் பாடலை கொடைக்கானலில் ஒரு சிறு குன்றின் உச்சியில் எடுத்தோம் . அங்கே ஜீப் மட்டுமே போகும் . இயற்கை உபாதையை கழிக்கக் கூட முடியாத அந்த இடத்தில்
பிரணிதா மூன்று நாட்கள் இருந்து நடித்துக் கொடுத்ததை மறக்க முடியாது .
இன்னொரு பாடலில் நண்பர்களாக உள்ள பிரபலங்களின் புகைப்படங்கள் இவற்றோடு பொது இடங்களில் இருந்த நண்பர்களை அவர்களுக்கே தெரியாமல் படம் எடுத்து போட்டு இருக்கிறோம்
படம் பொங்கலுக்கு வெளிவருகிறது . உடனே விஜய் படத்துக்கு போட்டின்னு அர்த்தம் இல்ல . பொங்கல் என்பது நாலஞ்சு நாள் விசேஷம் .
நாலு தடவை விஜய் சார் படத்தை பார்த்தா ஒரு தடவை எங்க படத்தை மக்கள் பாக்க மாட்டாங்களா ? அதனால்தான் பொங்கலுக்கு தைரியமா வர்றோம்னு விளம்பரம் பண்ணினோம் ” என்கிறார் .
எனக்கு வாய்த்த அடிமைகளின் வெற்றி பி ஆண்டு சி சென்ட்டர் வரை நீளட்டும் !








