“எப்படி நன்றி சொல்வேன் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு?”

whatsapp-image-2016-12-27-at-12-41-52-am

‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழவைக்கிறது”என்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன் .

என்ன உதவி ?

” எங்கள் ‘துருவங்கள் பதினாறு’ படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப் பட்டது .எங்கள் படத்தில் நடிக்க,  நடிகர்  ரகுமான் சார் சம்மதித்தால் போதும் என்று இருந்தோம்.

ஏனென்றால் அவரை விட்டு விட்டு வேறு யாரையும்  அந்தப் பாத்திரத்திற்கு என்னால் நினைக்க முடியவில்லை. அவர் எங்கள் குழுவுக்குள் வந்தபிறகு தொடங்கியது எல்லாமேநல்லதாக நடந்தன.

 நாலா பக்கமிருந்தும் நல்லெண்ண அதிர்வலைகள் வர ஆரம்பித்து விட்டன. அதுவே எங்களை  முன்னோக்கி வழி நடத்தியது.

whatsapp-image-2016-12-27-at-12-41-43-am

எங்கள் படக்குழுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் செய்த உதவியும் அளித்த ஊக்கமும் தந்த ஆதரவும் எங்களுக்குப்   பலம் சேர்த்து எங்களை மேலும் வலுப்பெற வைத்தது.

அவர் எங்கள் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் .அது யூடியூபில் பெரிய ஹிட்டடித்தது.அதன் பிறகு எங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பு விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்து விட்டது. 

புல்வெளியில் கிடந்த நாங்கள் விண்வெளியில் மிதக்கும் உணர்வைப் பெற்றோம் .சிறிய அளவில் அகல் விளக்கு போல இருந்த படம் பகல்விளக்கு சூரியன் போல பெரிதாகிவிட்டது.

அது படத்தின் வியாபாரத்துக்கு பெரிதும் உதவியது. ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடெய்ன் மெண்ட் என.பெரிய நல்ல நிறுவனங்கள்  படத்தை வெளியிட முன்வந்தன.
 
video

படம் டிசம்பர் 29–ல் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை விளம்பரப் படுத்தும் வகையில் ‘காற்றில் ஒரு ராஜாளி’, என்கிற  ப்ரோமோ சாங் அதாவது விளம்பரப் பாடலை உருவாக்கி இருக்கிறோம்.

அதை 27 ஆம் தேதி  ஏ.ஆர். ரகுமான்சார் ட்விட்டரில் வெளியிடுகிறார். அவர் கைபட்டதும் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி விடும் படம்.

எங்கள் முயற்சிக்கு ஆதரவும் ஊக்கமும் தந்து வரும் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எங்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மன உணர்வை வெளிப்படுத்த நன்றி தவிர வேறு வார்த்தைகளைத் தேடுகிறேன் ” என்கிறார் கார்த்திக் நரேன் நெகிழ்ச்சியுடன்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *