என்னமோ வச்சிருக்கும் ‘மோ’

mo-2

ஹிந்து  என்.ராம் அவர்களின் மகன் திரு.ரமேஷின் புதல்வர் ரோஹித் ரமேஷ் தனது WTF என்டர்டைன்மென்ட் சார்பில்  தயாரிக்க,
 
ஐஸ்வர்யா ராஜேஷ், சுரேஷ் ரவி, முன்டாசுப்பட்டி முனீஸ் காந்த் ராமதாஸ், ரமேஷ் திலக், யோகி பாபு, தர்புக சிவா, மைம் கோபி , செல்வா ஆகியோர் நடிக்க,

அறிமுக இயக்குனர் புவன் ஆர்.நல்லான் இயக்கி இருக்கும் படம் மோ .

30 ஆம் தேதி வெளிவரும் இந்தப் படத்தை வெங்கீஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெங்கடேஷ் ராஜா உலகம் முழுக்க வெளியிடுகிறார் .

mo-4

படம் பற்றிப் பேசும் இயக்குனர் புவன் ஆர்.நல்லான் ”  ஒரு பள்ளிக் கூட நிலத்தை அபகரிக்க முயலும் ஒரு அரசியல்வாதிக்கும் ,

அதை இழக்க விரும்பாத உரிமையாளருக்கும் நடக்கும் மல்லுக்கட்டில் பேய் உள்ளே நுழைந்தால் என்ன ஆகும் என்பதே இந்தப் படத்தின் கதை .

இது ஹாரர் காமெடி படம் என்றாலும் வழக்கமான பேய்ப் படங்கள் அகோர உருவம் எல்லாம் இருக்காது . வித்தியாசமான படமாக உங்களைக் கவரும்.

 படத்தில் ஹீரோ இல்லை . ஹீரோயின் இல்லை

mo-1

கதாநாயகியாக ஆக முயலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் . ராஜ தந்திரம் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவரும்

கிடாரி , பலே வெள்ளையத் தேவா போன்ற படங்களின் இசை அமைப்பாளருமான தர்புக சிவா ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்.  இப்படி இந்த படம் பல கதாபாத்திரங்களின் கதைதான் 

இந்தப் படத்துக்காக பல வருடங்களாக பயன்படுத்தாமல் கிடக்கும் ஒரு பள்ளி எங்களுக்கு தேவைப்பட்டது . அப்படி நிஜமாகவே பல வருடம் பாழ்பட்டுக் கிடக்கும் ஒரு பள்ளி எங்களுக்கு

ஸ்ரீ பெரும்புதூரில் எங்களுக்கு கிடைத்தது . சென்ற டிசம்பரில் படப் பிடிப்பை நடத்தினோம்

mo-5

சென்னையே வெள்ளக்காடாக ஆனபோது எங்களில் பலர் அந்தப் பகுதியிலேயே மாட்டிக் கொண்டோம். அப்போது நடிக நடிகையர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாத ஒன்று ” என்றார் .

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது ” இந்தப் படத்தில் எனக்கு ஜோடி இல்லை . காதல் இல்லை . பாட்டு இல்லை  ஆனால் மிக சிறப்பான கேரக்டர் . மிக நல்ல கதை .

எனவே விரும்பி நடித்தேன் . படம் ரொம்ப நல்லா இருக்கும்” என்றார்

படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு பற்றி  கூறும் வெங்கீஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெங்கடேஷ் ராஜா “பல சிறு படங்களை வெளியிட்ட எனக்கு இது முதல் பெரிய படம் .

வெங்கடேஷ் ராஜா
வெங்கடேஷ் ராஜா

அதுவும்  இந்து போன்ற ஒரு பெரிய நாளிதழ் குடும்பம் தயாரித்து இருக்கும் படத்தை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன் .

தமிழகம் எங்கும் பல பெரிய விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி இருகிறார்கள் .திட்டமிட்டதை விட நிறைய திரையரங்குகள் கிடைப்பது குறிப்பிடத்தக்க விஷயம் . படம் எல்லோரையும் கவரும்படி இருக்கிறது .

குடும்பத்தோடு வந்து பார்க்கக் கூடிய நம்பி வரும் ரசிகரகளை ஏமாற்றாமல் முழு திருப்தி தரும் படமாக டிசம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது மோ ” என்கிறார்

mo-6

அது என்ன படத்துக்கு மோ .. என்று ஒரு பெயர் ? என்று கேட்டால் படத்தில் பூஜா தேவரியா நடிக்கும் ஒரு கவுரவத் தோற்றம் சம்மந்தப்பட்ட பெயர் அது .

அதுக்கு மேல இப்போ சொல்ல முடியாது . படத்தில் பார்த்து ரசிங்க” என்கிறார்கள் .

அப்போ… என்ன    ‘மோ’ இருக்கு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *