ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர் வி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, நடராஜ் , ராஜாஜி , விஜய் முருகன் , சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடிப்பில்
ராமு செல்லப்பா எழுதி இயக்கி இருக்கும் படம் ‘எங்கிட்ட மோதாதே’. வரும் மார்ச் பத்தாம் தேதி வெளிவரும் இந்தப் படததை கே ஆர் பிலிம்ஸ் சார்பில் சரவணன் வெளியிடுகிறார் .
படம் பற்றி உற்சாகமாக பேசுகிறார் இயக்குனர் ராமு செல்லப்பா. ” நாகர்கோவில் திருநெல்வேலி பின்னணியில் நடக்கும் 1980கள் காலகட்டக் கதை .
படங்களுக்கு கட் அவுட் பேனர் வைக்கும் தொழில் செய்யும நட்டி தீவிர ரஜினி ரசிகர் .ராஜாஜி கமல் ரசிகர் . ராஜாஜி கதாபாத்திரத்தின் தங்கையாக வரும் சஞ்சிதா ஷெட்டியை, நட்டி காதலிக்கிறார் .
ராஜாஜியின் ஜோடி பார்வதி நாயர் .இவர்களது தொழில், காதல்,பொழுது போக்கு , சந்தோசம் இந்த அடிப்படையில் போகும் கதை ரசிகர் மன்றத்து சந்தோஷமான குதூகலங்களை படமாக்கி இருக்கிறோம் .
இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி சார் நடித்த ஜானி படத்தை மனதில் வைத்து , படத்துக்கு ஆரம்பத்தில் ஜானி ஆர்ட்ஸ் என்று பெயர் வைத்து இருந்தோம் .
அப்புறம் இன்னும் கமர்ஷியலாக பேர் வைக்க நினைத்து எங்கிட்ட மோதாதே என்ற இந்தப் பெயரை நினைத்தோம் . விஜயகாந்த் சார் சோபனா நடிக்க,
ஆர் சுந்தர்ராஜன் சார் தயாரித்து இயக்கிய எங்கிட்ட மோதாதே படம் 1990 ஆண்டு வந்தது
தவிர சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதிராஜா படத்தில் ரஜினி சார் , நதியா பாடும் எங்கிட்ட மோதாதே பாடல் ரசிகர் மத்தியில் பிரபலம் .
சுந்தர்ராஜன் சாரை அணுகி அனுமதி கேட்டபோது எந்த பலனும் எதிர்பாராமல் அனுமதி கொடுத்தார் ரசிகர்களைக் கவரும் சுவையான படமாக இது இருக்கும் . ” என்கிறார்
“இந்தப் படத்தில் மிக ஜாலியான இயல்பான கிராமத்துப் பெண் தோற்றம் . கறுப்பா ஆக்கிட்டாங்க . ஆனா பிரைட்டான கேரக்டர் ” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி .
“படம் சொல்லும கால கட்டத்துக்கு ஏற்ப இளையராஜா படங்களில் வருமே அப்படி ஓர் பாணியில், ஆனால் அவர் இசையை காப்பி அடிக்காமல் கொடுத்துள்ளேன் ” என்கிறார் இசை அமைப்பாளர் நடராஜன் சங்கரன் .
ஹீரோ நட்டி என்ன சொல்கிறார் ?
” ரஜினி கமல் ரசிகர் விஷயம் , அதை சொன்ன நேர்த்தி , எல்லோரும் ரசிக்கும் கதைப் போக்கு, . என் கேரக்டர் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது .
ரசித்து நடித்து இருக்கிறேன் . காதல் ,கமர்ஷியல் கலாட்டா இது . எல்லா தரப்பு ஆடியன்சுக்கு ரொம்ப பிடிக்கும் ” என்கிறார் .
படத்தின் பாடல்களை திரையிட்டுக் காட்டினார் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் டூயட் பாடல்கள் ரசனையாக எடுக்கப்பட்டு இருந்தன .
நாயகிகள் இருவரும் எளிமையின் அழகோடு பாடல்களில் வளைய வருகிறார்கள் . நடராஜ் சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி ரஜினி ஸ்டைலில் சுவாரஸ்ய மேஜிக்காக எடுக்கபட்டு இருந்தது .
மார்ச் பத்தாம் தேதி திரை தொடுகிறது எங்கிட்ட மோதாதே ‘








