ஆதி பகவன் புரடக்ஷன்ஸ் சார்பில் எ. திருகுமார் தயாரித்து ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க, அசோக் , சங்கர் ஆகியோர் நாயகர்களாகவும் , யாழினி , சஞ்சனா ஆகியோர் நாயகிகளாக அறிமுகம் ஆக,
வாலிதாசன் என்பவர் கதை வசனம் பாடல்கள் எழுதி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றிச் செல்வன் என்பவர் இயக்கி இருக்கும் படம் வியர்வை.
ஒளிப்பதிவு கே வி ராஜன் , இசை ஏ ஆர் நேசன், எடிட்டிங் இலட்சுமணன்.
வாலி தாசன் ஆட்டோ டிரைவராகப் பணியைத் துவக்கியவர் .உழைப்பின் அடையாளம் வியர்வை என்பதால் படத்துக்கு அந்தப் பெயராம் .
படத்தின் மழைக்காட்சி ஒன்றுக்காக சென்னை புறநகர் பகுதியில் உள்ள கண்ண பாளையம் என்ற ஊரில் சினிமா செயற்கை மழைப்படி காட்சியை எடுக்க முடிவு செய்திருக்க, அதற்கான தண்ணீர் லாரி வராத நிலையில்,
அந்த ஊரின் வழியே போகும் ராட்சத தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க , அந்த நீரில் செயற்கை மழைக்காட்சியை படமக்கினார்களாம்.
மழையால் துவங்கும் மேகம் என்று த்வங்கும் அந்தப் பாடலுக்கு சிசர்ஸ் மனோகர் நடிக்கிறார்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜாகுவார் தங்கம் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்


