சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ய கூடிய ஒரு படைப்பாக இருக்கும் “என்கிட்ட மோதாதே“
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நட்டி (எ ) நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி , பார்வதி நாயர் நடிப்பில் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த ராமு செல்லப்பா இயக்கி இருக்கும் படம் என்கிட்டே மோதாதே
படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் நாயகன் நட்டி (எ ) நட்ராஜ், ஈராஸ் சாகர் , படத்தில் மற்றுமொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி , பார்வதி நாயர் , இயக்குநர் ராமு செல்லப்பா ,
இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் , கணேஷ்சந்தரா, பாடலாசிரியர் யுகபாரதி, படத்தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா , ஸ்டன்ட்மாஸ்டர் மைகேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவிஞர் யுகபாரதி பேசும்போது, “எனக்கு இயக்குநர் பாண்டியராஜை மிகவும் பிடிக்கும். அவர் பசங்க படத்துக்கு தேசிய விருது வாங்கியதால் அல்ல.
அவர் என்னைவிட குள்ளமாக இருப்பதால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு எப்போதும் இயக்குநர்கள் அனைவரும் குள்ளமாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு
அந்த வகையில் இயக்குநர் பாண்டி ராஜ் குள்ளமாக இருப்பதால் அவர் மீது எனக்கு தனி ப்ரியம் ,
இப்போது“ என்கிட்ட மோதாதே “ படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பாவை அதைவிட எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏனென்றால் அவர் இயக்குனர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் மற்றும் அவர் பாண்டி ராஜை வீட குள்ளமாக இருப்பவர் என்பதால்தான் .
இந்தப் படத்தில் ஒரு பாடல் உள்ளது. அப்பாடலுக்கு சங்கர் மகாதேவன் அல்லது கைலாஷ் கேர் ஆகியோரை பாட வைக்கலாம் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது
ஆனால் இயக்குநர் ‘நாம் ஏன் இந்த பாடலுக்கு நட்டி நட்ராஜை பாட வைக்ககூடாது?’ என்று என்னிடமும் இசையமைப்பாளரிடமும் கேட்டார். வாய்ஸ் டெஸ்டுக்கு பின்னர் அவரை பாட வைத்தோம்.
அந்த பாடல் அருமையாக வந்துள்ளது. நடிகர் நட்ராஜ் பாடகர் நட்ராஜாகவும் இனி தொடர வேண்டும் என்று ஆசைப்ப டுகிறேன். ப டத்தில் ஒரு பாடலை டி.இமானும் பாடியுள்ளார்” என்றார்
இயக்குனர் பாண்டிராஜ் தன் பேச்சில் ” போன வாரம் என்னடான்னா என்னோட உதவியாளர் பிரஷாந்த் இயக்கிய புரூஸ் லீ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வந்திருந்தேன்.
இந்த வாரம் என்னுடைய இன்னொரு உதவி இயக்குநர் ராமு செல்லப்பாவின் என்கிட்டமோதாதே திரைப்படத்தின் பாடல் வெளியிட்டுக்கு வந்திருக்கிறேன்.
ராமு செல்லப்பா என்னிடம் உதவி இயக்குநராக சேரும் போது நான் அவரிடம் கேட்ட முதல் விஷயம் ‘உனக்கு சமைக்க தெரியுமா?’ என்பதுதான்.
அப்போது என்னிடம் தெரியும் என்றார் அதன் பிறகு நான் அவரை சமைக்க சொன்னேன்,
அவர் சமைத்த உணவு மிகவும் மோசமாக இருந்தது அதன் பிறகு நான் அவருக்கு முதலில் சமைக்கதான் கற்றுக் கொடுத்தேன்.
அதன் பிறகுதான் என்னிடமிருந்து அவர் சினிமாவை கற்றுக் கொண்டார். வம்சம் திரைப்படத்தின் படபிடிப்புத் தளத்தில் இவர் எப்போதும் மறைந்து இருந்துதான் கூட்டத்தை வேலை வாங்குவார்
ஏனென்றால் அவர் உயரம் கம்மியாக இருப்பதால் யாரும் அவரை பொருட்படுத்தமாட்டார்கள் என்பதால். பின்னர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து,
அதன் பின்னர் என்னிடம் வந்து “ சியர்ஸ்“ என்னும் தலைப்பில் கதை சொன்னார். அதை என்னை தயாரிக்கவும்
சொன்னார். ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன்,
ஏனென்றால் அப்படத்தின் கதை அப்படி அந்தப் படம் யு / ஏ வகையறா கதை கூட இல்லை அது ஒரு “ஏ ஏ ஏ “ வகையைச் சேர்ந்த கதை. ‘எங்க இருந்து இந்த மாதிரி கதையெல்லாம் பிடிச்ச?’ என்று நான் கேட்டேன்
அதற்கு ‘ இது என்னுடைய நண்பரின் கதை இதில் நானும் சம்பந்தபட்டிருக்கிறேன்’ என்றார்
“இதை நான்த யாரிக்க முடியாது” என்றதும் வெகுநாட்கள் கழித்து ‘வேறு ஒரு கதை எழுதி இருக்கிறேன், இந்த கதை சுப்பிரமணியபுரம் போல இருக்கும்’ என்று கூறினார் அது தான்“ என்கிட்ட மோதாதே
“ திரைப்படத்தின் கதை .மற்றும் ட்ரைலர் முதல் அனைத்தும் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது ” என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.
விழாவில் நட்டி பேசும்போது
“இப் படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பா என்னிடம் கதை சொல்ல வரும்போது சிறுவன் போல் இருந்தார்.
நான் இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் என்று கூறி என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தார்.
அவர் கதை கூறியதும் கதை எனக்கு மிகவும்பிடித்திருந்து. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தில் நடிக்க எனக்கு பெருமையாக உள்ளது.
இந்த குழுவுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் மற்றும் மகிழ்ச்சி.” என்றார்
சஞ்சிதா ஷெட்டி தன் பேச்சில்
“நான் எப்போதும் மார்டன் ரோலுக்குதான் பொருந்துவேன் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் அதை இப்போது யக்குநர் ராமு செல்லப்பா மாற்றி விட்டார்.
இந்தப் படத்தில் திருநெல்வேலி பெண்ணாக நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. நட்டி உடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் படத்தில் அவர்மிகவும் இயற்கையாக நடித்துள்ளார்” என்றார் சஞ்சிதா ஷெட்டி.
பார்வதி நாயர் பேசிய போது ,
”நானும் சஞ்சிதா போல் தான் இப்படத்தில்தான் முதன்முதலாக கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளேன். திருநெல்வேலி பெண்ணாக நடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி .
எல்லோரும் ஒரு குடும்பம் போல் பணியாற்றினோம். இன்று வரை எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்” என்றார் பார்வதி நாயர்.
விழாவில் ஈரோஸ் சாகர் பேசும்போது”, இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் சமர்ப்பணம் செய்யக் கூடிய ஒரு படைப்பாக இருக்கும்.
1980 களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைதான் “ என்கிட்ட மோதாதே “ என்றார்.