விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் படத்தின் டிரைலரை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில் இயக்குனர் மனு ஆனந்த் பேசியபோது, “2006 ல் விஷ்ணு ஒரு நடிகராக மட்டும் தான் இந்தப்படத்திற்குள் வந்தார். வேறு ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை செய்ய முடியாத நிலை உருவானபோது, விஷ்ணு சார் அவரே இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்தார். என் மீதும் என் திரைக்கதை மீதும் அவர் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. தயாரிப்பாளராக அவர் என்னிடம் சொன்னது, மனு நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் இந்தப் படம் வெற்றி பெறுவதை பொறுத்து தான் நான் அடுத்த படங்கள் தயாரிக்க முடியுமா என்பது முடிவாகும் என்றார்.

ரைசா வில்சன் , “. கதாபாத்திரம் சவாலாக இருந்தது, இதை மிஸ் பண்ண கூடாது என முடிவு செய்தேன். இப்படத்தில் ஒவ்வொருத்தரும் உயிரை தந்து வேலை செய்துள்ளார்கள், இந்த படத்தில் எனக்கு துப்பாக்கி தந்தார்கள், எனக்கு துப்பாக்கி என்றாலே பயம், ஆனால் சில்வா மாஸ்டர் தான் என்னை இயல்பாக்கி நடிக்க வைத்தார். இது ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள் “என்றார்
டிசைனர் பூர்த்தி , “மஞ்சிமாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் என்பதால் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக காஸ்ட்யூம் செய்தோம். படம் அட்டகாசமாக வந்துள்ளது.”என்றார்
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் , “இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பெரும் பெரும் கடின உழைப்புடன் பணி புரிந்துள்ளனர், ஒரு மிகப்பெரிய படமாக வந்துள்ளது. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு, இயக்குநர் மனுவுக்கு நன்றி. “என்றார்
இசையமைப்பாளர் அஷ்வத், “இந்த படத்தில் ஐந்து பாடல் இருக்கிறது அதில் இன்று ஒரு பாடல் வெளியாக உள்ளது. இதில் நிறைய பேர் பாடியுள்ளார்கள், வேலை பார்த்துள்ளார்கள். எல்லோருக்கும் நன்றி. ஐந்து பாடல் எடிட்டில் தப்பித்து வந்துவிட்டது, விஷ்ணு விஷால் படங்களில் நிறைய பெரிய இசையமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள், ஆனால் அவர்களை தாண்டி என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இயக்குனர் மனு வாய்ப்பு தேடிய காலத்தில் அவர் வைத்திருந்த மற்ற ஸ்கிரிப்டுக்கும் என்னை தான் இசையமைப்பாளராக வைத்திருந்தார் அவருக்கு நன்றி. “என்றார் .
நடிகை மஞ்சிமா மோகன் , “எங்கள் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு நன்றி. இந்தப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கியிருக்கிறோம், பூர்த்தி மிகச்சிறப்பாக ஸ்டைலீஷ் செய்துள்ளார் ஒரு படத்திற்கு மிக முக்கியம் கதாப்பாத்திரத்தின் ஸ்டைல். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் அனைவரும் ஹீரோ ஹீரோயினாக இல்லாமல் படத்தில் எல்லோரும் கதாபாத்திரங்களாக வந்துள்ளார்கள். விஷ்ணு தயாரிப்பாளராக நடிகராக இரண்டு வேலை பார்த்தார். அவரது பொறுமை என்னை பிரமிக்க வைத்தது. படம் அருமையாக வந்துள்ளது”என்றார்.
விஷ்ணு விஷால் மேலாளர் தங்கதுரை, “விஷ்ணு விஷாலை நீர்ப்பறவை படத்திலிருந்து தெரியும் அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனமும் உறுதுணையாக இருந்துள்ளது. இந்தப்படத்தின் கதையை கேட்டபோது இதை தயாரிக்க முடியுமா? என தோன்றியது ஆனால் எல்லோருக்கும் கதை பிடித்திருந்தது. படம் நன்றாக வந்துள்ளது, “என்றார். .
விஷ்ணு விஷால் தந்தை பேசியபோது, “என் மகன் ஒரு நல்ல மனிதனாக ஸ்டாராக வந்ததற்கு தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம், அடுத்து அவரை பற்றி நன்றாக எழுதிய பத்திரிக்கைகாரர்கள் காரணம். அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி ஆகியோர் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தப் படம் பார்த்தேன் மிகச்சிறந்த படம் “என்றார்.
நடிகர் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசும்போது, ” எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி.
