கெத்துல @ விமர்சனம்

திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை  திரைக்கதையில்  உருவாகியிருக்கிறது ‘கெத்துல.’
 
கதை… அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் நபருக்கு ( சலீம் பாண்டா) பெண்களைக் கடத்தி தனது ‘அந்தரங்க ஆசை’க்கு பலியாக்குவது வழக்கம். அந்த வரிசையில் மதுபானக்கூடத்தில் நடனமாடும்  பெண்ணையும் (நாயகி ரீனு) அணுகுகிறார். அவரை, அந்த நேரத்தில் அங்கிருந்த  ஒருவர் (நாயகன் ஸ்ரீஜித்) காப்பாற்றுகிறார். அதனால் காமுகனுக்கு  நாயகன் மீது கொலைவெறி வருகிறது. அதே நேரம் ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய நாயகன்  மீது நாயகிக்கு க்கு காதல் உருவாகிறது. நாயகன்  அந்த காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்… ஏன்? 
 
 நாயகனைப் பழிவாங்கத் துடிக்கிற காமுகன்  என்ன மாதிரியான நடவடிக்கையில் இறங்கினார் ? நாயகனின் முன் கதை என்ன என்பதே படம். 
 
இருவேறு தோற்றங்களில் வருகிற ஸ்ரீஜித் உற்சாகமாக நடிக்கிறார்  ஆக்ஷன் காட்சிகளிலும்  அதே உற்சாகம். ஆரம்பக் காட்சிகளில் கவர்ச்சியில் அப்புறம்  பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது, காதலனுக்கு நேர்ந்த பிரச்சனைகள் தெரிந்து  கலங்குவது என நாயகியும் ஆர்வமாக நடித்திருக்கிறார். 
 
வில்லனாக வரும் சலீம் பாண்டாவும் அப்படியே . . அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது!
 
திருநங்கைகளாக நடித்திருப்பவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டுப் பாராட்டலாம்.
 
 இயக்குநர் வி.ஆர்.ஆர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
 
இசையும் ஒளிப்பதிவும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *