இயக்குனர் சங்கல்ப் ரெட்டி, தான் எழுதிய ப்ளூ ஃபிஷ் என்ற நாவலை தானே திரை வடிவில் எழுதி இயக்கி இருக்கும் படம் காஸி (GHAZI). போட்ட காசை எடுக்குமா காஸி? பார்க்கலாம் !
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இன்றைய பங்களா தேஷ் ( அதன் அன்றைய பெயர் கிழக்கு வங்காளம் ) பாகிஸ்தானின் ஒரு பகுதியாகப் போனது .
தனக்கு இரண்டு பக்கமும் பாகிஸ்தான் இருப்பது இந்தியாவுக்கு சிக்கலாகவே இருந்தது .
இந்த முக்கியத்துவம் காரணமாக கிழக்கு பாகிஸ்தானில் அதாவது கிழக்கு வங்காளத்தில் அதாவது இன்றைய பங்களாதேஷில்,
பாகிஸ்தான் ராணுவத்தால் கடும் அடக்குமுறைக்கு ஆளான வங்காள மக்களுக்கு உதவ வேண்டும் என்று இந்திய வங்காளிகள் விரும்பினார்கள் .
இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தில் அப்போது வாழ்ந்த இந்திய வங்காளிகள் ,
கிழக்கு வங்காளம் என்கிற கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானால் அடக்கு முறைக்கு ஆளாகும் தங்கள் தொப்புள் கொடி உறவுகளான வங்காளிகளை காக்க , இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர் .
வங்காளிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக கிழக்கு பாகிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்கி வங்காளிகளுக்கு கொடுத்தது இந்தியா .
இன்றைய சூழ்நிலையில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள், போலி ரூபாய் நோட்டு , போதைப் பொருள்கள் வருவதில் பங்களாதேஷ்க்கு பெரும் பங்கு உண்டு .
எனினும் இன்றும் மேற்கு வங்காள மாநில மக்களுக்கு பங்களா தேஷ் மீது மாறாத பாசம் உண்டு.
சில பல வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மம்தா பானர்ஜி அமைச்சராக பதவி ஏற்கும் தினத்தில், பங்களா தேஷில் வெள்ளம் வந்து பலர மாண்டனர் .
அப்போது மம்தா பானர்ஜி ” என் இன மக்கள் பக்கத்து தேசத்தில் (அது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தேசமாக இருந்தாலும் ) வெள்ளத்தால் சாகும்போது ,
எதற்கு இவ்வளவு விளக்கம், என்றால் …
அப்படி கிழக்கு பாகிஸ்தானில் வங்காளிகளை அழித்துக் கொண்டு இருந்த ராணுவத்துக்கு ஆயுதம் கொடுக்க 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முயன்றபோது–
இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணாமான அமைந்ததாக – விசாகப் பட்டினம் பகுதியில் நடந்ததாக- கூறப்படும் ஒரு சம்பவமே இந்த காஸி படம் .
அமெரிக்க கப்பற்படையில் USS Diablo (SS-479) என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு வரை இருந்த இந்தக் கப்பலை அமெரிக்காவிடம் இருந்து லீசுக்கு வாங்கிய பாகிஸ்தான் அதற்கு காஸி என்று பெயர் வைத்தது
அரேபிய மொழியில் காஸி என்றால் இஸ்லாத்தைக் காக்கும் வீரன் என்று பொருள் . அப்போது இந்தியாவிடம் இருந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை .
ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ “இல்லை இல்லை … கப்பலுக்குள் நடந்த வெடிப்பு காரணமாகவோ , விசாகப் பட்டினம் கடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நீர்க் கண்ணி வெடிகள் வெடித்தோதான் எங்கள் கப்பல் அழிந்தது ” என்கிறது .
(இந்த காஸி படத்தில் காஸி கப்பலில் உள்ள பாகிஸ்தான் கப்பற்படையினர், கண்ணி வெடிகள் மூலம் இந்திய நீர் மூழ்கிக் கப்பலை அழிக்க முயன்று அந்த முயற்சியில் தோற்பதாக காட்சி வருகிறது )

இரண்டு தரப்பிலும் அல்லாத பொதுவான நாடுகளோ, ”காஸி வெடித்து அழிந்தபோது ஐ என் எஸ் ராஜ்புத் விசாகப்பட்டினம் கடற்கரையில்தான் இருந்தது ”என்றே கூறுகின்றன .
”எப்படிப் பார்த்தாலும் காஸியின் அழிவு என்பது 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் அவிழ்க்கப் படாத பெரிய புதிர்களில் ஒன்று ” என்றே இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் காஸியை கடலுக்குள் தாக்கி அழித்தது, விசாகப் பட்டினத்தில் இருந்து போன S21 எனப்படுகிற INS Karanj என்ற நீர் மூழ்கிக் கப்பல்தான் என்று சொல்கிறது இந்த காஸி படம்
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் படைகளுக்கு, எந்த வகையிலும் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களைத் தாராமல் தடுக்கும் பணி இந்திய கப்பல் படைக்கு தரப்படுகிறது .
நீர் மூழ்கிக் கப்பல் மூலமே ஆயுதம் அனுப்ப பாகிஸ்தானால் முடியும் என்ற நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஐ என் எஸ் கரஞ்ச் நீர் மூழ்கிக் கப்பல் வங்காள விரிகுடா கடலுக்குள் ரோந்து சொல்கிறது .
கப்பலுக்குள் முதன்மை தலைமை அதிகாரியாக ஒரு சீக்கியர் (கே கே மேனன் ) இரண்டாம் நிலை முதன்மை அதிகாரியாக ஒருவர் (ராணா டகுபதி) , இருவரையும் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவர் (அதுல் குல்கர்னி)
எந்த நிலையிலும் முதன் முதலில் நாம் தாக்குதல் நடத்தக் கூடாது என்பது இந்திய அரசின் முடிவு . அதற்கு பொறுப்பு இரண்டாம் நிலை முதன்மை அதிகாரி .
ஆனால் முதன்மை நிலை தலைமை அதிகாரியான சீக்கியர் நேர் மாறு . முந்தைய போரில் இந்திய அரசின் இதே கட்டுப்பாடு காரணமாக தன் மகனை கொடூரமாக இழந்தவர் அவர்
இவர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சில பிரச்னைகள் ஒரு வழியாக தீரும் நிலையில் , சீக்கிய அதிகாரியின் பாணியில் இரண்டாம் நிலை முதன்மை அதிகாரி ஒரு முடிவு எடுக்கிறார் .
அதன் விளைவாக அங்கே கடலுக்குள் முன்னேறும் காஸி கப்பல் வைக்கும் நீர்க் கண்ணி வெடி ஒன்றில் மோதி, ஐ என் எஸ் கரஞ்ச் கப்பல் பலத்த சேதம் அடைந்து டைட்டானிக் போல கடலுக்குள் மூழ்கித் தரை தட்டுகிறது .
விசாகப் பட்டினத்தை தாக்கி அழிக்க காஸி திட்டமிடுகிறது .
பெரும் போராட்டத்துக்கு பிறகு கடலுக்குள் இருந்து சேதாரம் அடைந்து இருக்கும் ஐ என் எஸ் கரஞ்ச் மேலே வர, விசாகப்பட்டினத்தை தாக்கும் முன்பு ஐ என் எஸ் கரஞ்ச் கப்பலை அழிக்க, எந்தக் குறையும் இல்லாத சக்தி வாய்ந்த காஸி கப்பல் முயல ,
அப்புறம் என்ன நடந்ததே என்பதுதான் இந்த படமான காஸி .
சும்மா சொல்லக் கூடாது . இதுவரை இந்திய சினிமா கண்டிராத திரை அனுபவம்!
இந்தியாவின் முதல் ஆழ்கடல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் படமாக வந்துள்ளது காஸி. அந்தப் பெருமைக்கு மாசு ஏற்படாத வகையில் படமாக்கலில் அசத்தி இருக்கிறார்கள் .
இவை எல்லாம் அட்டகாசமான ரசனை அனுபவம் .
சீக்கிய அதிகாரி ராணுவத் தலைமையகத்தின் உத்தரவுக்கு முன்பே தாக்குதல் நடத்த விரும்புவதற்கான காரணத்தை சொல்லும் இடத்தில் திரைக்கதையாளர் சங்கல்ப் ரெட்டியும் ,
“வீரம் என்பது போரில் மரணம் அடையறது இல்ல, எதிரியைக் கொல்றது ” என்பது உள்ளிட்ட பல இடங்களில் வசனகர்த்தா சங்கல்ப் ரெட்டியும் (தமிழில் மணிகண்டன்) ,
”மொத்தக் கப்பலும் அதிரும் . கீழ விழாம இருக்க எதையாவது கெட்டியா புடிச்சுக்குங்க” என்ற அறிவிப்பின் போது ,
நீர் மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தின் மேலே இருந்து கடலுக்குள்ளே மூழ்கி நீந்தத் துவங்கும் நொடி…. கப்பலுக்குள் இருக்கும் அதுல் குல்கர்னி தலையை தூக்கி சீலிங்கை பார்ப்பது ,
இந்தப் படத்தை மிக அட்டகாசமாக உருவாக்கியதில் மிக சிறப்பான பங்கு , நம்ம ஊரு ஒளிப்பதிவாளர் மதிக்கு இருக்கிறது .
பெரிசாக இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் டைட்டான பிளாக்குகளில் அரங்கச் செலவு அதிகமாக இல்லாமல் படமாகும்படி முடிந்தவரை சிக்கனமாக இயங்கி இருக்கிறது ஆர்ட் டைரக்ஷன் .
ஆனால் கிராபிக்ஸ் ஆசம் அட்டகாசம் . கடலடிக் காட்சிகள் மிகப் பிரம்மதமகப் படமாக்கப்பட்டு உள்ளன
பாடல்கள் இல்லாத நிலையில் பின்னணி இசையில் திகில் திரில் கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் கே .
சீக்கிய அதிகாரியாக வரும் கே கே மேனன் நடிப்பில் அசத்தி இருக்கிறார் .
பதவிக்கு உரிய மிடுக்கு , ஹீரோயிசம் என்று எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்து சபாஷ் வாங்குகிறார் ராணா. அதுல் குல்கர்னியும் ஒகே
காஸி கப்பலின் பாகிஸ்தான் கமாண்டராக வரும் குணால் கௌசிக் (?) நடிப்பில் அசத்தி இருக்கிறார்
கிழக்கு வங்காளத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி அல்லல் படும் வங்காள அகதியாக டாப்ஸி. குறைவான காட்சிகள் என்றாலும் வங்காளித் தோற்றத்தில் அருமை .
இரண்டு நீர் மூழ்கிக் கப்பலுக்கும் இடையே டார்பிடோக்கள் சீரும் காட்சிகளால் இதயத்தை உடலுக்கு வெளியே துடிக்க வைக்கிறார்கள். கிரேட் !
இரண்டாம் பகுதியில் கப்பல்களுக்கான மோதல் மட்டுமே படமாகப் போய்விடுவதால் திரைக் கதையின் விஸ்தீரணம் குறைகிறது . அது ஒரு குறையே .
பிடிப்புக்கு தேசியக் கொடி டாலரை ஒரு அதிகாரி பிடிப்பது போன்ற, லிட்டில் டீட்டெயில் காட்சிகளை சிறு சிறு கிளைக் கதைகளை இரண்டாம் பகுதியில் சேர்த்து,
காஸி கப்பலின் கேப்டன் ‘சென்னை அல்லது விசாகப்பட்டினத்தைத் தாக்கலாம்’ என்று சொல்கிறார் . அன்றைய நிலையில் விசாகப் பட்டினத்தை விட முக்கிய துறைமுகமாக இருந்த சென்னையை விடுத்து,
இந்திய தேசப் பற்றை வலியுறுத்தும் இந்தப் படத்துக்கு காஸி என்று பாகிஸ்தான் கப்பலின் பெயரை வைத்தது ஏன் என்ற கேள்வி வருகிறது .
ஒரு சென்சேஷனுக்குதான் என்றால் , காஸி கப்பலின் சக்தி என்ன ? அது எந்த வகையில் சக்தி வாய்ந்த ஆபத்தான கப்பல்? என்பதை எல்லாம் படத்தில் சொல்லி,
காஸி கப்பலின் பலம் படத்தில் விவரிக்கப் படவே இல்லை . அதை விவரித்தால்தனே , அதை எப்படி நமது கப்பல் சமாளிக்கப் போகிறது என்ற பதட்டம் அதிகரிக்கும் !
படத்தின் கதைப்படி எஸ் 21 கப்பல் காஸியை அழித்து விட்டு வெற்றிகரமாக விசாகப் பட்டினத்தை அடைந்து விட்டதாக படம் சொல்கிறது .
இப்படி சில குறைகள் , நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் இருந்தாலும் ….
ஒரு படமாகப் பார்க்கையில் காஸி ஏற்படுத்தும் பிரம்மிப்பு அசாதாரணமானது . அபாரமானது .
பள்ளிப் பாடத்தில் நீர் மூழ்கிக் கப்பல் என்ற வார்த்தையை மட்டும் படிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் படத்தைக் காட்டினால் நீர் மூழ்கிக் கப்பல் என்றால் என்ன என்று புரிந்து ரசித்து வியப்பார்கள்
அந்த வகையில் யாராலும் தவிர்க்க முடியாத படம் காஸி .












