“நடப்பது படத்தின் பூஜையா இல்லை வெற்றி விழாவா என்று சந்தேகம் வருகிறது.அந்த பிரம்மாண்டமாக நடக்கிறது பூஜை” என்று விஜய் ஆன்டனி சொல்ல வேண்டும் என்றால் அந்த படத்தின் பூஜை எவ்வளவு பாசிட்டிவ் அதிர்வுகளோடு இருந்திருக்க வேண்டும்?
அப்படி இருந்தது கோல்மால் படத்தின் பூஜை !
.‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே பாக்யராஜ்மற்றும் கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த தமிழ்த் திரைப்படத்தை இயக்குகிறார்

இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது அப்போது பாராட்டிப் பேசிய விஜய் ஆன்டனிதான் அவ்வாறு மனப்பூர்வமாக பாராட்டினார் .
அதே போல் வாழ்த்திப்பேச வந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்பி சவுத்திரி ” தயாரிப்பாளர் போட்ட மால் (பணம் ) திரும்ப வரவேண்டும் என்பதையே கோல் (GOAL)ஆகக் கொண்டு இயக்குனர் பொன் .குமரன் இந்த படத்தை இயக்கி வெற்றி பெற வேண்டும் “என்று வாழ்த்தினார் .தயாரிப்பாளர் தனஞ்செயனும் வாழ்த்திப் பேசினார் .
பூஜை முடிந்து பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது , “முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்,”என்றார் இயக்குனர் பொன்குமரன்

மேலும் பேசும்போது “ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும். பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்,அதிக பொருட்செலவில் மொரிஷியஸில் ‘கோல்மால்’ முழு படமும் படமாக்கப்படும்”என்றார் பொன்குமரன்
நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும்என்றார் தயாரிப்பளார் வினோத் ஜெயின்

அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாளவுள்ளார். படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றவுள்ளனர்.
இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் எம் நரேஷ் ஜெயின்.. எம் செந்தில் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்வார். டூனி வடிவமைப்பு பணிகளை செய்வார். படத்தின் மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிப்பார்.