டிசம்பர் 10 அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி படம் “க்” !

தர்மராஜ் ஃபிலிம்ஸ்  சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்க, ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபு தமிழ் இயக்கத்தில்  புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”.

தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் இத் திரைப்படம் வரும் டிசம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது.

ஜீவி திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்த, இயக்குநர் பாபு தமிழ் “க்”  படத்தில் மீண்டும் ஒரு புது வகை ஜானரில் ரசிகர்களை அசத்தியுள்ளார்.

ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து,  இத் திரைப்படம் உருவாகியுள்ளது. உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் ஃபேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது.

அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட த்ரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

புதுமுகங்கள் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், YG மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.
  
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ்  இசையமைத்துள்ளார் .பியார் பிரேமா காதல் பட  எடிட்டர் மணிக்குமரன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். 

ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்து செல்லும் விதமாக,  “க்”  திரைப்படம் 2021 டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *