இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியபோது, “இன் கார்’படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
நடிகை ரித்திகா சிங் பேசியபோது, “இன் கார்’ படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் நன்றி.”என்றார்.
நடிகர்கள் :
ரித்திகா சிங்
சந்தீப் கோயத்
மனிஷ் ஜான்ஜோலியா
ஞான பிரகாஷ்
தொழில்நுட்ப குழு :
தயாரிப்பு நிறுவனம் : Inbox Pictures
தயாரிப்பு : அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி
எழுத்து இயக்கம் : ஹர்ஷ் வர்தன்
ஒளிப்பதிவு : மிதுன் கங்கோபாத்யாய்
எடிட்டர்: மாணிக் திவார்
சண்டைப்பயிற்சி : சுனில் ரோட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (AIM )
