இந்த நிலை மாறும் @ விமர்சனம்

பந்தளம் சினிமாஸ் சார்பில் சிவா மற்றும் விஜி தயாரிக்க,ராம் குமார் சுதர்ஷன் , அஷ்வின் குமார், சாம்ஸ் , ஒய்ஜி மகேந்திரா , டெல்லி கணேஷ். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடிப்பில்,வி. அருண்காந்த், எழுதி இசை அமைத்து இயக்கி இருக்கும் படம் . 

ஒரு கார்ப்பரேட்  பத்திரிக்கை நிறுவத்தின் மேட்ரிமோனியல் சேவைக்கு எதிராக , இணைய தள  ரேடியோ ஸ்டேசன் துவங்கி நடத்தும் இளைஞர்கள் இருவர் செயல்படுகிறார்கள் . அதில் விளம்பரம் கொடுத்து இருக்கும் நபர்களை போனில் பேசி வம்பிழுக்கிறார்கள் . அதனால் மேட்ரிமோனியல் விளம்பரம் வருவது பாதிப்படைகிறது. 

கார்ப்பரேட் நிறுவனம் ரேடியோ ஸ்டேஷன் இளைஞர்கள் மீது வழக்குப் போட அப்புறம் என்ன ஆனது . 

வித்தியாசமான புதுமையான கதைக்கு முயன்று இருக்கிறார்கள். படத்தின் துவக்கத்தில் சாமி இங்கிலீஷ் பாட்டு எல்லாம் போட்டு இருக்கு . 
முதல் பாதி வெகு சாதரணமாக போகிறது . இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சைவ அசைவ நகைச்சுவைகள் வருகின்றன . 

கதையில் இருந்த வித்தியாசத்தை மற்ற விசயங்களிலும் காட்டி நம்பகத்தன்மை மிக்க சுவாரஸ்யான திரைக்கதை மற்றும் படமாக்கல் செய்து இருந்தால் , இந்த நிலை மாறி இருக்கும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *