
தான் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு கதை சொன்ன ஒரு இயக்குனரிடம் , கதை பிடித்த நிலையில் தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் கேட்ட கேள்விதான் … மேலே உள்ள தலைப்பு.
திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார் மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக விஷ்ணு விஷால், ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் , கர்ணா , ஜெயப்பிரகாஷ் , அனுபமா குமார் ஆகியோர் நடிக்க, ஆர்.ரவிக்குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் பட,ம் இன்று நேற்று நாளை .
பொதுவாக நேற்று இன்று நாளை என்றுதான் சொல்வார்கள். இந்தப் பெயரில் அமார் எம்ஜிஆர் நடித்த படம் ஒன்று கூட உண்டு. ஆனால் ”அது என்ன இன்று நேற்று நாளை?” என்று கேட்டால், “அந்த விசயம்தான் இந்த படத்தை தயாரிக்க சொன்னது ” என்கிறார் சி.வி.குமார் .
”இன்றைய நிகழ்வு இதன் நேற்றைய நிலைமை அதன் நாளைய முடிவு என்ற நிலையில் நிகழ்வில் இருந்து முடிந்த ஒன்றை பேசி பின்னர் நடக்க இருக்கும் ஒரு விஷயத்தை பேசும்படம் இது . படம் ஒரு ஃபேண்டசி காமெடி மற்றும் காதல் படம் இது ” என்று மில்லி மீட்டர் கணக்காக அளந்து அளந்து பேசுகிறார் இயக்குனர் ரவிகுமார் .
“ஹீரோவுக்கு ஒரு விஷயம் கிடைக்கிறது . அது நேற்று எப்படி இருந்தது நாளை என்ன நிலைமைக்கு போகிறது என்பதுதான் படம் ” என்கிறார் விஷ்ணு விஷால்.
அமரகாவியம் படத்தில் ஆளுயர அழகு பொக்கேவாக நடித்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மியா ஜார்ஜ் என்ன ‘மியாவ்’கிறார். ” என்னைப்பொறுத்தவரை படத்தின் கதைதான் முக்கியம் . பத்து வருஷம் ஆனாலும் மியா இப்படி ஒரு படத்துல நடிச்சான்னு சொல்லணும் . அந்த மாதிரி படங்கள்லதான் நான் நடிக்க ஆசைப்படுறேன். இன்று நேற்று நாளை அந்த மாதிரி ஒரு படம் ” என்கிறது இந்த பூனைக்குட்டி.
படத்தின் கதையை டைரக்டர் சொன்ன போதுதான் ‘ கதை ரொம்ப பிரமாதமா இருக்கு. . ஆனா சொன்ன மாதிரி குழப்பம் இல்லாமல் எல்லோருக்கும் புரியற மாதிரி எடுத்துக்கொடுத்துருவீங்களா?” என்று சம்மந்தப்பட்ட பலரும் கேட்டார்களாம். எல்லோருக்கும் உறுதி கொடுத்து படத்தை ஆரம்பித்து எண்பது விழுக்காடு வரை முடித்து இருக்கிறார் இயக்குனர் ரவிகுமார் .
அப்போ .. இப்பவே நீங்க ஒரு பிராமிசிங் டைரக்டர்தான் !