
லிங்கா திரைப்படம் கேரளாவில் மொத்தம் ஐம்பது திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
அதில் ஒன்பது தியேட்டர்களில் இருந்து மூன்றே நாட்களில் தூக்கப்பட்டது.
மற்ற தியேட்டர்களிலும் கடமைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கேரளத்து விநியோகஸ்தர்கள்.
லிங்கா படத்தின் கேரளா உரிமை மொத்தம் 11 கோடிக்கு விற்கப்பட்டது.
அதில் இதுவரை நான்கு கொடிதான் வசூல் ஆகி இருக்கிறது .
இன்னும் ஒரு கோடி வசூல் ஆவதே பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது.
ஆக எப்படிப் பார்த்தாலும் 6 கோடி நஷ்டம் ஆவது உறுதி என்கிறார்கள் .
அதாவது 55 சதவீதம் நஷ்டம் !
பாபா படம் கூட இவ்வளவு மோசமான நிலைமைக்கு வந்தது இல்லையாம்.
லிங்கா படத்தின் படுதோல்வி ரஜினியின் அடுத்த பட வியாபாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் சினிமா நோக்கர்கள்
ரஜினியின் கேரியரில் லிங்கா ஒரு பெரிய கரும்புள்ளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை