உலக அரசியல் பேசும் தமிழ் ‘ஜெட்லீ’

jetlee 2

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ்   நிறுவனம்  தயாரிக்க, முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்க,

மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்றவருமான  நடிகர் சலீம்குமார் மற்றும் எத்திராஜ் பவன் , இவர்களுடன் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்க

jetlee 3

நாயகர்களில் ஒருவரான ஜெகன் சாய் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ஜெட்லீ

ஆடு, மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என பல  ஜீவன்களும் தமிழ் சினிமாவில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில்,

இந்தப் படத்தில்  விடுபட்டு போன வெள்ளைப் பன்றியை மையப் படுத்தி உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு உருவாகி உள்ள படம்  ‘ஜெட்லி ‘ என்கிறார்கள்  

jetlee 1

படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழாவில் படத்துக்குப் பாடல் எழுதிய வைரமுத்து, கலைப்புலி எஸ் தாணு, இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் கலந்து கொண்டனர் .

படத்தின் ஒரு டீசரை கலைப்புலி எஸ் தாணுவும், இன்னொரு டீசரை வைரமுத்துவும் , மூன்றாவது டீசரை ஒளிப்பதிவாளர் மணிகண்டனும் வெளியிட,

jetlee 4

படத்தின் சிங்கிள் டிராக் புரோமோ வீடியோ பாடலை வெளியிட்டு வாழ்த்தினார் இயக்குனர் மகிழ் திருமேனி .

படம் பற்றிக் கூறும்  இயக்குனர் ஜெகன் சாய்,  “இது காமெடி படம் மட்டுமல்ல.உலக அரசியலை சொல்லும் படம்.

அண்டை நாடுகள் எதுவும் பக்கத்து நாடுகளின் மீதுள்ள அக்கறையால் மட்டும் அன்புக்கரம் நீட்டுவதில்லை..

அவர்களது வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கமே என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

jetlee 5

இதுவரை யாருமே இந்த விஷயத்தை பதிவு செய்ததில்லை. வெள்ளைப் பன்றியை வைத்து வித்தியாசமான சில விஷங்களை படமாக்கி இருக்கிறோம்.

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது.

jetlee 6

இதே ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் திராவிடன், நயனம் நடிக்க “ இடி மின்னல் புயல் காதல் “ படத்தை யோகேந்திரன் மகேஷ் இயக்கத்தில் துவங்குகிறோம்” என்கிறார்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *