பிரதீப் ஜோஸ் தயாரிப்பில் எஸ் பி அர்ஜுன் , ஹக்கா இணை தயாரிப்பில் ,
ஷங்கரிடம் 2. 0 படத்தில் பணியாற்றியவரும் , திறந்த புத்தகம், கால் நூற்றாண்டுக் காதல், நீங்க நல்லவரா கெட்டவரா ஆகிய குறும்படங்களை இயக்கியவரும் குறும்படத்துக்காக விருது பெற்றவருமான அரண் சேர்ந்து தயாரித்து , நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம் ஜிகிரி தோஸ்த் .
ஷாரிக் ஹாசன் அம்மு அபிராமி, வி ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன் பாடகரும் நடிகருமான சிவம் ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படத்துக்கு ஒரு கிடாயின் கருணை மனு, பந்தன், சத்திய சோதனை, விழித்திரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர் வி சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி வி பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவரும், பிரபு தேவா படம் ஒன்றுக்கு இசையமைப்பாளருமான, அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார்.

விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யந்தொட்ட நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது .
விக்கியின் பிறந்த நாளை ஒட்டி நண்பர்கள் மகாபலிபுரம் சொல்ல, வழியில் ஒரு பெண்ணை ஒரு கொடூர கேங்ஸ்டர் கூட்டம் காரில் கடத்திக் கொண்டு போவதை இவர்கள் பார்க்க, லோகியைத் தவிர மற்ற இருவரும் அவளைக் காப்பாற்ற முயல, விக்கி கண்டுபிடித்து இருக்கும் டெரரிஸ்ட் ட்ராக்கர் என்ற கருவி மூலம் அவர்கள் முயல நடந்தது என்ன என்பதுதான் படமாம்.
நண்பர்களின் கலாட்டா சூழல் என்று ஜாலியாகப் போகும் படம் இது என்கிறார் இயக்குனர் .

படம் எல்லோரையும் ஈர்க்கும்படி இருக்கும் என்கிறார் இணைத் தயாரிப்பாளர் அர்ஜுனன்.
சண்டைக் காட்சிகளில் உற்சாகமாக நடித்திருக்கிறார். ஷாரிக் .
காட்சியில் இல்லாதவர்களை மனதில் கொண்டு இசை அமைக்கும் சூழல் இந்தப் படத்தில் சவாலாக இருந்தது என்கிறார் இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி
விரைவில் திரைக்கு வரும் படம் இது