விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ், அன்பு தாசன், மாளவிகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கி இருக்கும் படம் ஜோ .
ஹரிஹரன் ராம், மீசையை முறுக்கு , நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படங்களில் இயக்குனர் பிரிவில் பணி புரிந்தவர்,
ஒளிப்பதிவு ராகுல் கே விக்னேஷ், இசை சித்து குமார் படத் தொகுப்பு கே ஜி வருண்
கேரளா தமிழ் நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ மாணவியரின் பதினேழு முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். முக்கோணக் காதலும் உண்டு .
“இந்தப் படத்துக்காக ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்தேன் .
அதனால் மற்ற எந்த வாய்ப்பையும் ஏற்க முடியாத நிலை இருந்தது ” என்கிறார் ரியோ .
“ஒரு கல்லூரி நடனப்பாடல். மிகக் குறைவான இசைக் கருவிகளை வைத்து யதார்த்தமான ஒலிகளோடு அந்தப் பாடல் அமைத்து இருக்கிறோம் என்றார் இசை அமைப்பாளர் சித்து குமார்.
அந்தப் பாடல் நன்றாக இருந்தது . படமாக்கப்பட்ட விதமும் சிறப்பு .
நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது படம்.