ஜுங்கா@விமர்சனம்

விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, ஏ அண்டு பி குரூப் சார்பில் அருண் பாண்டியன் மற்றும் ஐசரி கணேஷ் , ஆர் எம் ராஜேஷ் குமார் ஆகியோர் தயாரிக்க, 

விஜய் சேதுபதி, யோகி பாபு, மடோன்னா செபாஸ்டியன், சாயிஷா , சுரேஷ் மேனன், ராதா ரவி, சரண்யா பொன் வண்ணன், மொட்டை ராஜேந்திரன் , வினோத் ஆகியோர் நடிப்பில் , 
 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கி இருக்கும் படம் ஜுங்கா.
 
படம் ரசனைக்கு பங்கா இல்லை பங்கமா ? பேசலாம் . 
லிங்கா அவரது மகன் ரங்கா என்ற இரண்டு அரைவேக்காடு தாதாக்களின் மூன்றாம் தலைமுறை வாரிசான ஜுங்கா (விஜய் சேதுபதி)வுக்கு ,
 
அவரது தந்தை ரங்கா ,  தங்களுக்கு சொந்தமான சினிமா பாரடைஸ் என்ற திரையரங்கை ,
 
செட்டியார் என்ற ஒரு பணக்காரருக்கு ( சுரேஷ் மேனன்) விற்று விட்ட செய்தி தெரிய வருகிறது . 
 
ஜுங்காவும்  ரவுடியாக இருப்பதில் ஆர்வம் இல்லாத  அம்மாவின்  ( சரண்யா ) கண்ணீருக்கு பயந்து , தியேட்டரை மீட்க முடிவு செய்யும் ஜுங்கா, அதற்கு பணம் சேர்க்க மட்டும் ரவுடித்தனம் செய்து,  ஆகப் பெரும் கஞ்சனாக செலவு செய்து பணம் சேர்க்கிறார் . 
 
அதனால் தான் காதலிக்கும் பெண்ணையும் (மடோன்னா செபஸ்டியான்) பிரிகிறார் 
 
அப்பா வாங்கிய தொகையான ஒரு கோடியோடு செட்டியாரை ஜுங்கா பார்க்க , அந்த இடத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்ட கொரியன் கம்பெனிக்கு, 
 
விற்க நினைக்கும் செட்டியார்,  ஜுங்காவுக்கு தியேட்டரை தர மறுப்பதோடு அவமானப் படுத்தவும் செய்கிறார் . செட்டியாரின் மகள்  (சாயீஷா ) பாரிசில்  படிக்கும் விசயம் அறிந்து அங்கு போய் அவரைக் கடத்தி, 
 
அதன் மூலம்  செட்டியாரை மிரட்டி தியேட்டரை எழுதி வாங்க நினைக்கிறார் ஜுங்கா
 
அதற்காக நண்பனோடு ( யோகி பாபு) போய் செட்டியாரின் மகளை கடத்த திட்டமிடுகிறார். 
 
பிரான்சில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பிரான்ஸ் சிறையில் உள்ள, 
 
மாபியா கும்பல் தலைவனை விடுவிக்க விரும்பும் கடத்தல்காரர்கள் ,இந்த  செட்டியாரின் மகளை கடத்தி விடுகிறார்கள் . 
விளைவு ? ஜுங்காவை இத்தாலிய போதைப் பொருள் கடத்தல் மாபியா குழுவைச் சேர்ந்தவனாக சித்தரிக்கிறது போலீஸ் . 
 
அப்புறம் நடந்தது என்ன ? செட்டியாரின் மகளுக்கு என்ன ஆச்சு ? ஜுங்காவால் தியேட்டரை மீட்க முடிந்ததா என்பதே இந்த ஜுங்கா. 
 
மூன்று வேடத்துக்குமான விதம் விதமான கெட்டப் கள், தனக்கே உரிய அசால்டான வசன உச்சரிப்பு என்று கவனம் கவர்கிறார் விஜய் சேதுபதி.
 
இதுவரை இல்லாத வேறு மாதிரியாக நடை உடை பாவனைகள் , வசன ஏற்ற இறக்கம் , உச்சரிப்பு , வேகம்  என்று வேறு மாதிரியாக நடித்திருக்கிறார் .டானாக இருந்தாலும் ஜுங்கா  கடைசிவரை கஞ்சனாகவே இருக்கும் அந்த குணாதிசயம் அது தொடர்பான காட்சிகள் கல கல . 
 
இயக்குனர் கோகுலின் வசன காமெடிகள் , முதல் பாதியில் சிரிக்க வைக்கின்றன . 
 
” தமிழ் சினிமாவுல புரடக்ஷன் மேனேஜர்க்குதான் அதிக மரியாதை கொடுப்போம் “
 
“சிக்கனமா வரணும்கிறதுக்காக எட்டு ஃபிளைட் எக்கனாமிக் கிளாஸ் ல மாறி மாறி வந்தேன்”
 
– போன்ற புரபஷனல் காமெடிகளும் இருக்கின்றன . 
யோகி பாபு ஆங்காங்கே  தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார் . 
 
செட்டியார் பொண்ணு பாரிசில் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டதும் , ஜீப்பை எடுத்துக் கொண்டு,
 
( சென்னை) பாரீஸ் கார்னர் போய் தேடுவதும், அது பிரான்ஸ் பாரிஸ் என்று தெரிந்து அதிர்ச்சியாகி கதறுவது அதகளம் . 
 
மடோனா கொஞ்ச நேரம் வந்து விட்டுப் போக, படம் முழுக்க வரும் சாயீஷா, நடன அசைவுகளில் அசத்துகிறார் . 
சென்னை பாஷையில் சரண்யா அசத்தி இருக்கிறார் . செலவு என்பதை செலுவு என்று சொல்வது வரை பர்ஃபெக்ட் !
 
பாட்டியாக வரும விஜயா பாட்டி  நடிப்பில் கெத்து காட்டுகிறார் . குரல் மாற்றம் , உடல் மொழிகள் எல்லாம் அருமை . 
 
ஒரே காட்சியில் வந்தாலும் அசத்துகிறார் ராதாரவி. குறிப்பாக ஜுங்கா பற்றி சக டான் சொல்லும்போது எரிச்சலும் முதுமையும் கலந்த அந்த விரல் நடுக்கம் அபாரம்!
 
படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் வரும் நான் கடவுள்  ராஜேந்திரன் , வினோத் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள். 
 
சித்தார்த் விபின் இசையில் உருவான பாடலாசிரியர் லலிதானந்த் பாடல்களில் லோலிக்கிரியா பாடல் எல்லா வகையிலும் மேக்கிங் வித்தியாச அனுபவம் . 
 
டட்லீயின் ஒளிப்பதிவு பிரான்சின் பனிமலை , குளிர் நதி , பசுமை இவற்றின் அழகை ஈரத்துடன் உணர வைக்கிறது . கார் சேசிங் காட்சிகளும் [பேர் சொல்கிறது 
 
குடையை வைத்து விஜய் சேதுபதி போடும் சண்டையில் சண்டை இயக்குனர் அன்பறிவ் கவனம் கவர்கிறார்கள் .
என்ன பிரச்னை என்றால்… 
 
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பட பாணியில்  லைவ் ஆக இயல்பாக போகும் படம்,  இரண்டாம் பகுதியில் எந்த வித்தியாசமும் சுவாரஸ்யமும் இல்லாமல், 
 
 வழக்கமான கதைப்போக்கோடு கடத்தல்,  சேசிங் ,  கார்கள் மோதல் , வெட்டியாக சீறும் துப்பாக்கிகள், சீரியசான காட்சிகளில் உச்ச கட்ட லாஜிக் மீறல்கள் என்று  தடுமாறுகிறது. விஜய் சேதுபதியிடம்  சத்தமும்  ஜாஸ்தி . 
 
கடைசி பத்து நிமிடம் மீண்டும் சமாளித்துக் கொள்கிறது .  
 
திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் ஜுங்கா. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *