‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’- இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு 

 
ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,  சந்தோஷ் ரயான் இயக்கத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”.  
 
ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில்,  அவளது கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறாள்  அவளது தோழி.  கொலையின் பின்னணியையும், அந்த கொலைக்கான காரணத்தைக்  கண்டுபிடித்தாளா? கொலையை செய்தது யார்? அதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?, என்பது தான் இப்படத்தின் மையம். 
 
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து,   இன்வெஸ்டிகேசன் திரில்லர்  மற்றும் கோர்ட் டிராமாவாக  இப்படம்  உருவாகியுள்ளது. வித்தியாசமான களத்தில், அனைவரையும் கவரும் கமர்ஷியல் அம்சங்களுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான். 
 
இப்படத்தில் ஆஷிகா அசோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் சாண்ட்ரா அனில்  நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பேராடி, நிழல்கள் ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை, மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியபோது, “இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு,  2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர்  எல்லா பிசினஸ்  போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகிறார்,  ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன கிடைக்கிறது என்பதே தெரிய வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தந்து புதிய தயாரிப்பாளரை வாழ வையுங்கள். “என்றார்.
 
ஒளிப்பதிவாளர் வீரமணி ‘பேசியபோது, ” கொச்சின் சென்னையில் இரவு பகலாக ஷீட் பண்ணினோம். இரண்டு டோனில் இரண்டு கலர் பேட்டர்னில் ஷீட் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது .” என்றார்.
 
இசையமைப்பாளர் கௌதம் வின்செண்ட் பேசியபோது, “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் ஊர் கேரளா ஆனால் நான் படித்தது, வேலை பார்ப்பது சென்னையில் தான், இந்தப் படத்தில் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் அருமையாக வந்துள்ளது. என் மனைவி தான் இரண்டு பாடல்களில் பெண் குரலுக்கு பாடியுள்ளார். நாங்கள் எல்லோரும் புதியவர்கள்”என்றார்.
 
நடிகர் பிட்டு தாமஸ் பேசியபோது, “நான் கேரளா தான் தமிழ் பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பு எனது கனவு நனவானது போல இருக்கிறது. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி. இப் படத்தின் இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாக்யராஜ் சார் இருக்கும் மேடையில் இருப்பது பெருமை. இது க்ரைம் திரில்லர் நல்ல படம், இது என் இரண்டாவது தமிழ்படம். நானே டப்பிங் செய்துள்ளேன் படம் பார்த்து ஆதரவைத் தாருங்கள் “என்றார் .
 
நடிகை ஆஷிகா அசோகன்  பேசியபோது, ” பாக்யராஜ் சார் போன்ற ஆளுமையுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இந்தப் படம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற, நடக்கிற ஒரு முக்கியமான விஷயத்தை படத்தில் பேசியுள்ளார்கள்.”என்றார்
 
இயக்குநர் சந்தோஷ் ரயான் பேசியபோது, “இந்த படத்தை தயாரித்த சையத் தமீன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த லால் தேவ் சகாயம் சாருக்கு நன்றி. சரவணன் மசூத் இருவருக்கும் நன்றி. ஆஷிகா அசோகன் மிக முக்கியமான பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ஐஸ்வர்யா எப்போது சார் படம் வரும் எனக் கேட்டுக் கொண்டே இருந்தார். சூப்பராக நடித்துள்ளார். வில்லன்  நடிகர் சினான் மிக நன்றாக நடித்துள்ளார். கௌதம் எனக்காக பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அருமையான இசையைத் தந்துள்ளார். சந்தீப் மிக நன்றாக எடிட் செய்துள்ளார். ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி, இது நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது நம் தனிமனித ஒழுக்கத்தால் தான் மாறும், அதை இந்தப் படம் அழுத்தமாக பேசும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம். “என்றார்.
 
தயாரிப்பாளர், நடிகர்  JSK சதீஷ் பேசியபோது, “இந்த விழா மிக சரியாக நடக்கிறது. படக்குழு மிகத் தெளிவாக எல்லாவற்றையும் செய்கிறார்கள்.  இப்படத்தை தயாரித்த சையத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிஸினஸ் பற்றி தெரிந்து, துணிந்து நல்ல படத்தை எடுத்துள்ளார். படம் நான் பார்த்து விட்டேன், இயக்குநர்  சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் அருமையாக எடுத்துள்ளார். மியூசிக் எடிட்டிங் எல்லாம் நன்றாக உள்ளது. நடித்த அனைவருமே மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். இது போன்ற புதிய படத்தின் விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தரும் பாக்யராஜ் சாருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி.”என்றார்.
 
இயக்குநர் பாக்யராஜ் பேசியபோது, “தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள்.  அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத்  தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. 
 
இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் கரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன். முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப் படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நானும் இப்படம் பார்க்க  ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆடியன்ஸ் ரிவ்யூ வந்த பிறகு நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே பத்திரிக்கையாளர்கள் இம்மாதிரி சின்ன படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் தந்து ஆதரவு தாருங்கள் “என்றார்.
 
விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *