காத்திருப்போர் பட்டியல் @ விமர்சனம்

லேடி டிரீம் சினிமாஸ் சார்பில்  பைஜா டாம் தயாரிக்க, சச்சின் மணி, நந்திதா, அருள்தாஸ் நடிப்பில் ,

பாலையா ராஜ சேகர் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் காத்திருப்போர் பட்டியல்.

டிக்கெட் எடுப்போர் பட்டியலில் இடம் பெறலாமா ? பார்க்கலாம் . யாருடைய அனுமதியும் இன்றி குற்றவாளியை சுட்டுப் பிடிக்கும் அதிகாரம் இருந்தும்,
 
 அந்த அதிகாரம் இல்லாத போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டருக்கு மக்கள் தரும் மரியாதையை, 
 
தனக்கு தருவது இல்லையே என்று  கொந்தளிப்பவர்  , தாம்பரம்  ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி  வில்லியம்ஸ் (அருள்தாஸ்)
எனவே  ரயில் , ரயில் நிலையம் மற்றும் ரயில்வே லைனில் யாரவது சிறு தவறு அல்லது குற்றம் செய்தால் கூட ,
 
அவர்களை கடுமையாக தண்டிக்கும் வழக்கம் அவருக்கு இருக்கிறது . 
 
அப்படி ஒரு நாள் மாட்டும் நபர்களில், ரயில்வே தண்டவாளம் திருடும் நபர், குடிகாரர் ,  சசிகுமார் ரசிகர் மன்ற தலைவர், வேலையில் முதல் நாள் சேர இருப்பவர் இவர்களோடு ,
பாண்டிச்சேரியில் உள்ள காதலி மேகலாவை   (நந்திதா )  அவசர திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளைஞன் சத்யாவும் (சச்சின் மணி) ஒருவன் .
 
எல்லோரையும் சாவகாசமாக கோர்ட்டில் ஆஜர் படுத்த விலியம்ஸ் திட்டமிட,  அங்கே இருந்து தப்பிக்க முடிவு செய்யும் பலரும் ,
 
முடியாத நிலையில் சத்யாவை மட்டுமாவது தப்ப வைக்க திட்டமிடுகின்றனர் . 
 
அதன் படியே கோர்ட்டுக்குப் போகும் வழியில் சத்யா தப்பிக்க, வில்லியம்ஸ் கொந்தளிக்கிறார் . 
அந்த நேரம் பார்த்து மேகலா தாம்பரத்துக்கு வர, அவளை பிடித்து வைக்கும் வில்லியம்ஸ் , சத்யாவை  திரும்பி வரச் சொல்லி போனில் மிரட்டுகிறார். 
 
அப்படியே வரும் சத்யா , ‘ உன்னை யார் கிளம்பி வரச் சொன்னா ?’ என்று மேகலாவைத் திட்ட, பேச்சு வளர்ந்து சத்யாவுக்கும் மேகலாவுக்கும் சண்டை வருகிறது .
 
மனம் வெறுக்கும் மேகலா ரயில் முன் பாய, ரயிலும் பாய… அப்புறம் நடந்தது என்ன என்பதே,  இந்த காத்திருப்போர் பட்டியல் . 
விஜய் சேதுபதியின் குரலில் வில்லியம்ஸ்தான்  ஹீரோ என்று திரைக்கதையின் ஆரம்பத்தில் அறிமுகப் படுத்தும் ஜோர் பலே . 
 
வில்லியம்சின் கோபம் பொறாமை , முரட்டுத்தனம் என்று அந்த ஏரியா புதுசு . சபாஷ் . 
 
பிளாஷ் பேக்கில் வரும் காதல் , மாட்டிக் கொண்டவர்கள் தப்பிக்கும்  விதம் என்று படம் முழுக்க வரும் சின்னச் சின்ன டுவிஸ்டுகள் கவனிக்க வைக்கின்றன. 
 
சான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஒகே . 
 
சுகுமாரின் ஒளிப்பதிவில் நீலக் கலரின் ஆதிக்கம் அதிகம் பிளஸ் அழகு . பாண்டிச்சேரி லொக்கேஷன் எஸ்டாப்ளிஷ்மென்ட்  படு வீக் . சச்சின் மணி நம்பிக்கைக்குரிய புது முகம் .  அருள்தாஸ் ரன்னிங் ரோலில் ஜோராக ஓடுகிறார் .
 
நந்திதா ஒகே . சென்றாயன், அப்புக்குட்டி, அருண்ராஜா மற்றும் பலர் கவனிக்க வைக்கிறார்கள் . 
 
இன்னும் கொஞ்சம் லாஜிக் , இன்னும் கொஞ்சம் அழுத்தமான திரைக்கதை, இன்னும் சிறப்பான படமாக்கல் ,
 
உண்மைக்கு நெருக்கமான காட்சி அமைப்புகள் இருந்து இருக்கலாம் . 
 
எனினும் காத்திருப்போர் பட்டியல் … சீட் கிடைக்கும் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *