கலையரசன் கொண்டாடும் டார்லிங் 2

kalai 4

உற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலைத் தாய்.

அந்தக் கலைத்தாயின் அந்த ஆசீர்வாதம் பெற்ற இன்றைய தலைமுறை நடிகர்களில் முக்கியமான ஒருவராக, கலையரசன் திகழ்கிறார்.

‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு,  இப்போது அவர் உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் ‘டார்லிங்2′ படமும்  திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் அவர். 

 காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’,  ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன.

kalai 3

டாப் கியரில் இருக்கும் கலையரசனின், சினிமா பயணத்தில் இப்போது அவரது கால்ஷீட்  ஃபுல். அவர் நடிக்கும் படங்களில் மிகவும் முக்கியமானது,

சூப்பர் ஸ்டாரின்‘கபாலி’. இப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். 

இது ஒருபுறம் இருக்க, அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் தன் வாழ்வில் ஒரு விடுமுறை கொண்டாட்டத்தின் போது பார்த்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு,

 எழுதிய கதையை கொண்டு இயக்கி யிருக்கும் படம் ‘டார்லிங்–2’. 

இப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி  வெளியாகிறது.

kalai 2

’டார்லிங்–2’ படத்தைப் பொறுத்தவரை ஒரு அறிமுக இயக்குநர் இயக்கிருந்தாலும், இப்படத்தின் ஒட்டுமொத்த யூனிட்டையும் அவர் கையாண்ட விதமும்,

நுணுக்கமாக படத்தை உருவாக்கியதும் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. 

இப் பட ஷூட்டிங்கின் போது பெரும்பாலான நாட்கள் ஆந்தைகளைப் போல இரவு முழுவதும் முழித்திருந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பகல் முழுவதும் தூக்கியிருக்கிறது ஒட்டுமொத்த டீமும். காரணம் கதை.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டிருக்கும் ‘டார்லிங் -2’ படத்தைப் பற்றி கேட்டதுமே, தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தை எப்படி வெற்றி பெற வைத்து ஹிட்டாக்குவது என்பதில், 

Kalai - 1 

தனது அசாத்தியமான திட்டமிடல்களால் புகழ்பெற்ற சூப்பர் தயாரிப்பாளர் திரு. ஞானவேல் ராஜா, தனது பேனரில் வெளியிட இருக்கிறார்.

இதன் மூலம் இப்படத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையே முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது.

 இது தொடர்பாகவும், ‘டார்லிங் -2’ படம் பற்றியும் கலையரசன் கூறுகையில், “டார்லிங்-2’ படம் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக வெற்றிபெறும். 

இந்த வெற்றி என்னுடைய சினிமா கேரியரில் ஒரு நடிகராக என்னை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நம்புகிறேன்” என்று உற்சாகமாகிறார்.

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →