அசத்தும் டார்லிங் 2 முன்னோட்டம்

ramees 2
‘காக்க! காக்க! கனகவேல் காக்க!’ என்று ஆரம்பிக்கும் ‘டார்லிங் 2’ படத்தின்  டிரெய்லர், இப்போது ஒன்பது லட்சம் பார்வையாளர்களைக்  கடந்து மேலும் பலராலும் பார்க்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது .
 
படத்திள் ஹீரோவாக அறிமுகமாகும் ரமீஸ் ராஜாவிற்கு ‘டார்லிங் 2’ ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்! 
 
“பள்ளி கல்லூரி நாட்களிலேயே  நடிப்பின் மேல்  மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்; அந்த ஆர்வமே, எனக்கு சில குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்தது. 
 
அந்த காலக்கட்டத்தில் தான், ஸ்டண்ட்  மாஸ்டர் பில்லா ஜகன் மூலமாக நான் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரனைச் சந்தித்தேன்.
ramees 1
சில சந்திப்புகளில் நாங்கள் இருவரும் ‘டார்லிங் 2’ கதைக்குள் ஆழமாக இணைந்துவிட்டோம் . 
 
அதனை தொடர்ந்து, நடிப்பின் நுணுக்கத்தை நன்கு அறிய சில மாதங்கள் பயிற்ச்சியும் மேற்கொண்டேன். 
 
 படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா எங்களுக்கு அமைந்த ஓர் வரப்பிரசாதம் , படத்தின் வெளியீட்டு நாளான ஏப்ரல் 1, எங்களுக்கு ஓர் மிகபெரிய நாளாக அமையும் என்று நம்புகிறேன்.
 
டார்லிங் 2 படத்தில் அனைத்து  கதை அம்சங்களும் நிறைந்துள்ளது என்று நான் இப்போது நான் சொல்வது போல மக்களும் சொல்லும் நாளை எதிர்பார்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் ரமீஸ் ராஜா!
டார்லிங் 2 டிரைலர் பார்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →