ராஜ புஷ்பா பிக்சர்ஸ் சார்பில் ராஜேஸ்வரி மணிவாசகம் தயாரிக்க, தினேஷ் , அதிதி மேனன், ஆனந்த ராஜ் , தேவயானி, ரேணுகா, முனீஸ்காந்த்,
நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் காந்தி மணிவாசகம் இயக்கி இருக்கும் படம் களவானி மாப்பிள்ளை . மாப்பிள்ளை முறுக்கா ? இல்லை கிறுக்கா? பேசலாம் .
சின்ன வயசில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது பொறாமைக் கார நண்பன் கீழே தள்ளிவிட அடிபட்டதால் அதன் பின்னர்,
எந்த வாகனமும் ஓட்டக் கற்றுக் கொள்ளாமல் வளர்ந்து விட்ட இளைஞன் தேவாவுக்கு ( தினேஷ்) துளசி என்ற பெண்ணோடு ( அதிதி மேனன்) காதல் வருகிறது .
துளசியின் அம்மா ராஜேஸ்வரி (தேவயானி) . காதலித்த போது கார் ஓட்டத் தெரியும் என்று பொய் சொல்லி கல்யாணம் செய்து கொண்ட
ஒரே காரணத்துக்காக கணவன் கார்மேகத்தை (ஆனந்த ராஜ்) தள்ளி வைத்து இருப்பவள் .
ராஜேஸ்வரியிடம் கார் ஓட்டத் தெரியும் என்று தேவா பொய் சொல்ல , மகளின் காதலுக்கு சம்மதிக்கிறாள் ராஜேஸ்வரி .
கல்யாணத்துக்குள் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணிய தேவாவின் முயற்சிகள் தோற்க , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த கலைவாணி மாப்பிள்ளை .
கலர்புல்லாக இருக்கிறது படம் ( ஒளிப்பதிவு சரவணன் அபிமன்யு , கலை மாயா பாண்டி , )
தினேஷ் தனக்கே உரிய பாணியில் நடித்து உள்ளார்
ஆனந்த ராஜ் தேவயானி , ரேணுகாவும் கேரக்டருக்கு பொருத்தம்
ரகுநந்தன் இசையில் என்ன செஞ்ச புள்ள பாடல் மிக இனிமை .
மனோபாளால் , ராஜேந்திரன் , முனீஸ்காந்த் , , சாம்ஸ் , கிரேன் மனோகர் என்று நிறைய காமெடி நடிகர்கள் … இருக்கிறார்கள் .
கதை, திரைக்கதையில் இன்னும் சிறப்பாக முயன்று இருக்கலாம்