இயக்குநர் ஹரி உத்ரா பேசும்போது, ““கல்தா’எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வச்சு இந்தப் படம் பண்ணியிருக்கோம்.
கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி என்னுடைய நெடு நாள் நண்பர். நான் கதை சொன்னபிறகு ரொம்ப ஈடுபாட்டோட இதில் நடிச்சி கொடுத்திருக்கார்.தயாரிப்பாளர் ரகுபதி , ” இது எங்களுக்கு முதல் தயாரிப்பு. இயக்குநர் கதை சொன்ன போது ரொம்பவும் பிடித்திருந்தது. எனது மகன் இதில் நாயகனா நடிச்சிருக்கார். படம் நல்லா வந்திருக்கு. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்” என்றார்.
நாயகன் சிவ நிஷாந்த் கூறும்போது,ஒரு கமர்ஷியல் படமா மட்டுமில்லாம ஒரு நல்ல தரமான படமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தில் நான் அறிமுகமாவது ரொம்ப மகிழ்ச்சி.
தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம்
தயாரிப்பாளர்கள் – மலர்க்கொடி ரகுபதி, செ.ஹரி உத்ரா, ரா.உஷா
இயக்குநர் – செ.ஹரி உத்ரா,
ஒளிப்பதிவு – B. வாசு
படத்தொகுப்பு – முத்து முனியசாமி
இசை – K. ஜெய் கிரிஷ்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் வித்யாசாகர்
பாடியவர்கள் – தேனிசை தென்றல் தேவா, செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி, கார்த்திக், வந்தனா ஶ்ரீநிவாஸ், மது பாலகிருஷ்ணன், கானா இசைவாணி, கானா முத்து.
கலை – இன்ப ஆர்ட் பிரகாஷ்
சண்டைப்பயிற்சி – கோட்டி
நடனம் – சுரேஷ் S
புகைப்படம் – பா. லக்ஷ்மண்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one
டிசைன்ஸ் – பிளசான்.
