டர்னிங் பாயின்ட் புரடக்ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிக்க, சார்லி, மைம் கோபி, ஜார்ஜ், காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசாத், கோகுல் ஆகியோர் நடிப்பில் ராஜ வேல் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கும் படம்
தொடக்கப் பள்ளி வயதில் ஒழுங்காகப் படிக்காமல் , பெற்றோரை ஏமாற்றிக் கொண்டு திருட்டு வேலைகள் செய்து கொண்டு , நன்றாகப் படிக்கும் மாணவனை வெறுத்துக் கொண்டு இருக்கும் மூன்று சிறுவர்கள் (ரமேஷ் நசாத் , கோகுல் ) !
கல் உடைத்து கஷ்டப்பட்டு பிழைத்து பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து ஆளாக்கி விடவேண்டும் என்று போராடும் அவர்தம் பெற்றோர்கள் ( சார்லி, மைம் கோபி, ஜார்ஜ்)
ஒரு நிலையில் தவறு அதிகமாக பெற்றோர் கண்டிக்க , ஊரை விட்டே ஓடிப் போகும் சிறுவர்களை இந்த சமூகம் எப்படி எதிர் கொண்டது ? அவர்களின் கதி என்ன ஆனது என்பதை சொல்வதே இந்த படம் .
பெற்றோர் கண்டிப்பது நல்லதற்குத்தான் . அது புரியாமல் அவர்கள் மீது கோவித்துக் கொண்டு கால் போன போக்கில் போனால் சமூகத்தில் சிக்கி சீரழிய வேண்டி இருக்கும் என்பதை சொல்வது பாராட்டப் பட வேண்டிய விஷயம் .
வீட்டை விட்டு ஓடிப் போகும் சிறுவர்கள் படும் கஷ்டங்களை சொல்லி இருக்கிறார்கள்.
சார்லி , மைம் கோபி , ஜார்ஜ் , மற்றும சிறுவர்கள் இயல்பாக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் . சில பல கிராமத்து முகங்களும் யதார்த்தமாக உலா வருகின்றன
பின்புல உருவாக்கம் சிறப்பாக இருக்கிறது .
வீட்டை ஓடிப் போகும் சிறுவர்கள் படும் கஷ்டங்கள் , ஆபத்துகள் இன்னும் ஏராளம் . அவற்றை எல்லாம் சொல்லி அதிர வைத்து வீட்டை விட்டு ஓடிப் போவது எவ்வளவு பெரிய சிக்கல்களை தரும் என்பதை,
இன்னும் பதற வைக்கும்படி சொல்லி இருக்கலாம் . நிஜ நிலவரத்தின் முன் படம் சொல்லும் காட்சிகள் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு போதாமை
அதிலும் கூட வில்லன்கள் பூ போல அடிக்கிறார்கள் .
இன்னும் சிறப்பான திரைக்கதை , இயக்கம் , தொழில் நுட்ப நேர்த்தியோடு எடுத்து இருக்கலாம் .
எனினும் பிழை ….. குற்றமில்லை !
