”மணி சாரின் படம் என்றால் உயர்தரம்தான்”- நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் விளம்பரப்படுத்தும் பயணத்துக்காக இந்தியாவையே சுற்றி வந்த கார்த்தி  படம் வெளியீட்டுக்கு ஒரு நாளைக்கு முன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் .
 
“களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், பத்திரிகையாளர்கள் நீங்கள் இப்படத்தைப் பற்றி மிக ஆழமாக கேள்விகள் கேட்டு இப்படத்திற்கான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.
 
பிற மாநிலங்களில் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று கூறியவர்களுக்கு இப்போது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று  தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், பத்திரிகையாளர்களான நீங்கள் இதைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். அது இப்படத்தின் மீதான  ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
மேலும், படத்திற்கான ஆர்வத்தோடு நம் நாட்டுக் கலாச்சாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. வெளியூர் செல்லும் போது சோழர்களின் வரலாறை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். மேலும், உங்களுடைய வாழ்த்துகள் எப்படி இருக்கும் என்று தெரியும். நேரில் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.
 
ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் அனைவருடனும் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. முக்கியமாக படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. சோழர்கள் காலத்தில் இருந்த கலாச்சாரத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தார் கல்கி. அதேபோல், மணி சார் காதல், அரசியல் என்ற எந்த மாதிரியான படம் இயக்கினாலும் காட்சியில் உயர்தரம் இருக்கும். இப்படத்திலும் அந்த தரம் இருக்கிறது “என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *