கத்தி படத்தின் வெற்றியைக் கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்ற சுபாஷ்கரன் அல்லிராஜா , அங்கிருந்து லண்டன் கிளம்பி இருக்கிறார் .
அந்த விமானம் இன்று (30 10 14 புதன் கிழமை ) மதியம் இலங்கை கொழும்புவுக்கு சென்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்ப தயாராக இருந்துள்ளது .
இந்நிலையில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக் கொண்ட பத்து நபர்கள் , அந்த விமானத்துக்குள் நுழைந்து பிசினால் கிளாஸ் இருக்கையில் அமர்ந்து இருந்த சுபாஷ்கரன் அல்லிராஜாவிடம் போய் , உங்களிடம் ஒரு விசாரணை இருக்கிறது விமானத்தை விட்டு இறங்குங்கள் என்று கூறி இருக்கிறார்கள் .
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ்கரன் அல்லிராஜாவும் அவருடன் இருந்த பிரேம் நாதன் சிவசாமியும் அதன்படியே கீழே இறங்க , அவர்களை இழுத்துக் கொண்டு இறங்கிய அந்த குழு அவர்களை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
விமானத்தில் லைக்கா நிறுவனத்தை சேர்ந்த முப்பது பேர் உடன் இருந்தும் இந்த சம்பவத்தை தடுக்க முடியாமல் அதிர்ச்சியில் உறைய ,
அந்த மற்ற நபர்களுடன் விமானம் லண்டன் கிளம்பிப் போனது .
இலங்கையில் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் இப்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை .
கத்தி படப் பிரச்னை விவகாரத்தில் நானும் தமிழன்தான் என்று சென்னையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அடிக்கடி கூறியதையும் , ராஜபக்சேவோடு சேர்ந்து தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் அடிக்கடி கூறியதையும் இலங்கை அரசு ரசிக்கவில்லை .
கத்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பெரும் தொகை ஒன்றை கேட்க இலங்கை அரசு முயல்கிறது என்றும் ஆஸ்திரேலியா வாழ் ஈழத் தமிழர்கள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்