MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நடிகர் விஜய்சேதுபதி வசனத்தில் நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ள , திரைப்படம் ‘குலசாமி’. வி தன்யா ஹோப் நாயகியாக நடிக்க, இயக்குநர் சரவண சக்தி அவர்களின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.
வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும்,ஜீ தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். மேலும், இப்படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந் நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியபோது, ” இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால்தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி. அமீர் அண்ணன் அவருடைய படங்களை தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர் அவர் எனக்காக வந்துள்ளார். சுரேஷ் காமாட்சியும் நானும் ஒன்றாக சுற்றியவர்கள். இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார் அவருக்கு நன்றி.
இசையமைப்பாளர் மஹாலிங்கம் பேசியபோது, “தயாரிப்பாளரும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் என் கிராமத்து இசையை ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் எனக்கு பிடித்ததை செய்து கொண்டிருந்தேன் அதைப் பார்த்து இந்த படத்திற்கு இசை அமையுங்கள் என்றார் தயாரிப்பாளர். இந்தக் களம் பெரிது புதிது என்பதால் தயங்கினேன் ஆனால் படக்குழு தைரியம் தந்தார்கள். இயக்குனர் எனக்கு ஊக்கம் தந்தார். நாங்கள் புது டீம். நீங்கள் தான் எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள் படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.”என்றார்.
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவி பேசியபோது, “என்னுடைய கேரியரை பிரஸ் போட்டோகிராபராக தான் ஆரம்பித்தேன் பிசி சாரிடம் தான் கேமரா கற்றுக் கொண்டேன். சரவண சக்தி கதை சொன்னபோதே இந்தப்படம் பெரிய வகையில் வரும் என்று தெரிந்தது. சரவண சக்தி மிகச்சிறந்த வகையில் இயக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். “என்றார்.
அதன் பிறகு நான் அந்த கதாநாயகனுடன் பேசினேன் அவர் 3 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக குறைத்துக் கொண்டார், அந்த கதாநாயகன் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான் , ஒரு வழியாக பேசி கஷ்டப்பட்டு படத்தை முடித்து விட்டோம், படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது, “சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார் ” என்று. அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன் ,
நடிகை தேவதர்ஷினி பேசிய போது, “நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை , படவா படத்தில் நான் நடித்திருக்கிறேன் அதன் மூலம்தான் சரவணன் சாரை எனக்கு தெரியும் அந்தப் படத்தில் நான் விமலுக்கு அக்காவாக நடித்துள்ளேன் இந்தப் படத்தில் அக்கா கதாபாத்திரம் இல்லை அதனால் தான் என்னை அழைக்கவில்லை , மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் ,படத்தின் டிரைலரை பார்க்கும்போது நன்றாக இருந்தது, விமலை நான் இப்படி பார்த்தது இல்லை எப்போதும் கலகலப்பான கதாபாத்திரத்தில்தான் நடிப்பார், ஆனால் இதில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார், படத்தின் இசையமைப்பாளர் சின்னத் திரையில் இருந்தே எனக்கு அவரை தெரியும் ஒரு நல்ல பாடகர் , பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது, படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் “என்றார்.
காவல்துறை அதிகாரி ஜாங்கிட் பேசியபோது, “தம்பி சரவணன் சக்தி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள், நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை, எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது என்னுடைய டிரைவர் தான், என் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கு தமிழ் தெரியாது, ஒரு நாள் அவரிடம் சீப்பு கேட்டேன் அதை நான் புரிய வைப்பதற்குள் ரொம்ப சிரமப்பட்டேன் , அன்றிலிருந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்,
இயக்குநர் அமீர் பேசியபோது, “இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர், நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச் சிறந்த திறமையாளர். இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோஷன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோஷன் செய்கிறார்கள் இன்றைய சினிமாவின் நிலை இதுதான்.
அப்படி இருக்கும்போது, இந்தப் படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக் குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.”என்றார் 
