முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றியிருக்கும் குலசேகரபட்டினம் என்ற புதிய படம் வேகமாக வளர்ந்து முடிவடைந்துள்ளது. அண்ணன் – தம்பி பாசத்தோடு காதலையும் கலந்து சொல்ல வருகிறது.
ஆ.ஜார்ஜ் வில்லியம், ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் என்ற நிறுவனத்தின் சார்பில் குலசேகரபட்டினம் படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தை பல முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆள்வான், கிராமத்து பண்பாடு, கலாசாரத்தோடு அண்ணன்-தம்பி பாசத்துடன் காதலையும் கலந்து நெஞ்சை நெகிழ வைக்கும் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.
இதில் கதாநாயகனாக ஜேம்ஸ் என்ற புதுமுக நடிகர் தனது முதல் படத்திலேயே அண்ணன்-தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.
வில்லனாக படத்தின் இயக்குனர் ஆல்வினும், காமெடி வேடத்தில் ஜூனியர் T.ராஜேந்திரன் என்பவரும் நடித்திருக்கிறார்கள். உமா, பிரியா, மதுபாலா, ஜெயக்குமார், பூபதி போன்ற புதுமுக கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, சுப்பம் மாதரம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், பசுவந்தனை கிராமம் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.
ஒளிப்பதிவை விஜய் கவனிக்க, தஞ்சை செல்வா, பிரவீன், சங்கர் என்ற மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சில படங்களில் இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள்.
பாடல்கள் – தஞ்சை சிகரன், எடிட்டிங் – கே.துரைராஜ், நடனம் – பவர்சிவா, கலை – மணி, கதிர், ஜெயக்குமார், மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், இணைத் தயாரிப்பு – பிரபா வில்லியம், தயாரிப்பு – ஆ.ஜார்ஜ் வில்லியம், எழுத்து, இயக்கம் – ஆள்வான்.