அப்படி என்ன இருக்கு, குதிரைவால் படத்தில் ?

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. 
 
அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரைவால்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. 
 
இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படம் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 
அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து படத்தை இயக்கியுள்ளனர்.
 
 கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். சில்லுக்கருப்பட்டி, வாழ் ஆகிய படங்களை அடுத்து பிரபல பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 
 
படத்தின் ட்ரெய்லரில், “கனவுல தொலைச்சத நனவுல தேடுறன்”, “உளவியல் போர்”, “கனவுக்கு மேக்ஸ்ல விடை இருக்கா?” “மேக்ஸ்ல ஒரு Illusion theory இருக்கு” – இது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
குதிரைவால்’ திரைப்படம் ஏன் திரையரங்குகளில் வெளியாக வேண்டும், பொது மக்கள் ஏன் பார்க்க வேண்டும், குதிரைவால் திரைப்படத்தில் என்ன சிறப்பு போன்ற கேள்விகளுக்கு படக்குழு பதிலளித்திருக்கிறது.
 
“நிறைய புதிய விஷயங்களை படத்தில் முயற்சி செய்திருக்கின்றோம் என்றாலும் இது ஒரு அரசியல் படம்.
 
 குதிரை, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரம்தான் குதிரைவால் படத்திற்கு அடித்தளம்.
 
 ஒரு மரபு வழிப் புனைவை இன்னொரு புனைவால்தான் உடைக்க முடியும் என்ற அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எழுதப்பட்டது. 
 
வரலாற்றில் குதிரை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவே இருந்து வருகிறது என்பதை குதிரைவால் படம் சுட்டிக்காட்டும். புனைவு மூலமாக ஒட்டுமொத்த வரலாற்றையும் குதிரைவால் படம் கேள்விக்கு உட்படுத்தும்.
 
இப்படத்தில் புதுமைகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவில் இது ஒரு சீரியஸான படமும் கூட. பெரியாரின் பகுத்தறிவு இப்படத்தில் இருக்கும். ஆனால் புனைவாக இருக்கும்.
இப்படத்தில் தமிழ் சிறு பத்திரிக்கைகளின் தாக்கம் உண்டு. இதில் மேஜிக்கல் ரியலிசம் உண்டு” என படக்குழு தெரிவித்திருக்கிறது. 
 
குதிரைவால் படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பா. ரஞ்சித், “தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது.
 
வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும்.திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்” என தெரிவித்திருக்கிறார். 
 
ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே இப்படம் கலந்து கொண்ட திரைப்பட விழாக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று இறுதியாக மக்கள் பார்வைக்காக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது குதிரைவால்.
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *