LION மற்றும் TIGER இணைப்பில் விஜய் தேவர கொண்டாவின் LIGER .

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம்  தயாரிக்க,  பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில்  நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர்  liger (Saala Crossbreed). 
 
lion  மற்றும்  tiger ஆகிய இரண்டு ஆங்கிலச் சொற்களின் இணைப்பே liger . 
 
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த  பான் இந்தியா திரைப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 
தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். 
 
பட வெளியீட்டை ஒட்டி  நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர்  பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர் இந்நிகழ்வினிள் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R K சுரேஷ் பேசியபோது, ”விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும். இனி விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப் படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் “என்றார். 
நாயகி அனன்யா பாண்டே , “தமிழ் ரசிகர்களே! நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளைத்  தமிழில் சொல்லக் கற்றுக் கொண்டு வந்தேன். இந்தப் படம் மிகப் பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச்சிறப்பான அனுபவத்தை தந்தது. “என்றார். 
நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியபோது, “தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப் படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ்ப் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன்.  வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். லைகர் பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். “என்றார். 
 
விஜய் தேவர்கொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுரின் லைகர் (Saala Crossbreed)  திரைப்படத்தின் “அக்டி பக்கடி” பாடல் வெளியாகியுள்ளது. 
நடிகர்கள்: 
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே மற்றும் கெட்அப் ஸ்ரீனு.
 
தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா
பேனர்கள்: Puri Connects மற்றும் Dharma Productions
ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா
கலை இயக்குனர்: ஜானி ஷேக் பாஷா
எடிட்டர்: ஜுனைத் சித்திக்
ஸ்டண்ட் இயக்குனர்: கிச்சா
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *