இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்திப் படம் M.S.Dhoni;The Untold Story.
ராஞ்சியில் ஒரு சாதாரண கிரிக்கெட் ஆட்டக்காரராக தனது பயணத்தைத் துவங்கிய தோனி , எப்படி இந்த உயர்ந்த நிலைக்கு வந்தார் என்பதை சொல்லும் இந்திப் படம் இது
அருண் பாண்டே , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் , இன்ஸ்பயர்டு என்டர்டைன்மென்ட் , பிரைடே பிலிம் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன.
சூசந்த் சிங் பாண்டே என்பவர் தோனியாக நடிக்கிறார் . மூன்று மணி நேரம் பத்து நிமிடம் ஓடும் இந்த இந்திப் படம் வரும் முப்பதாம்தேதி திரைக்கு வருகிறது
இதையொட்டி படத்தின் விளம்பர சென்னைக்கு வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி,
ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதாவை படக் குழுவினரோடு சந்தித்துப் பேசினார் .
பின்னர் பட அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர் ” தமிழ்நாடு எனக்கு பிடித்தமாநிலம் அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன்.
இந்தியாவில் பல இடங்களில் பல வித உணவுகளை சாப்பிட்டது உண்டு. ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் கிடையாது
தமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது” என்றார் .
நடிகர் சூர்யாவின் மகள் இந்த நிகழ்ச்சியில் தோனியிடம் , ” வீடு,பள்ளி,மைதானம்… இவற்றில் எங்கே நீங்கள் சந்தோமாக இருப்பீர்கள் ?”என்ற கேட்க
அதற்கு பதில் சொன்ன தோனி, “விளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி. பள்ளி எனக்கு இரண்டாவது வீடு. வீடு எனக்கு இரண்டாவது மைதானம்.” என்றவர் தொடர்ந்து
“நான் உங்கள் அப்பா சூர்யாவுடைய ரசிகன். அவர் நடித்த ” சிங்கம் ” படத்தை நான் ஹிந்தியில் பார்த்து வியந்துபோனேன். என்ன ஒரு கம்பீரம்…” என்றார் .
“பள்ளிப் பருவத்தில் தாங்கள் குறும்புத்தனம் செய்வீர்களா என்று கேள்விக்கு,
“நான் பள்ளிப் பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாகத்தான் இருப்பேன், இந்த வயதில் இப்படிதான் இருக்க வேண்டும்” என்று சொன்னவுடன்
சூர்யாவின் மகனான தேவ் “நானும் மிக குறும்புதனமான விளையாட்டு பையன்” என்றார்
” உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என்று ரசிகர்கள் கேட்டவுடன், தோனி தோரணையுடன் எழுந்து நின்று சட்டையை கோதியபடி
“நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன்” என்று சொல்லிவிட்டு ரஜினிகாந்த் ஸ்டைலில் “என் வழி ,.தனி வழி” என்று அவர் கூற ரசிகர்கள் ஆர்பரித்தனர்..