தனது படபடப்பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானி’ கதாப்பாத்திரத்தில் நடித்த ‘ஹரி’.
வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு ‘மைம்’ கலைஞர். அதாவது வசனங்கள் இல்லாமல் பாவனைகளை விசயங்களை சொல்வதில் வல்லவர் .
சின்னதோ, பெரியதோ! தனக்கு கொடுக்கும் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி கொண்டு, அந்த கதாபாத்திரமாகவே மாறும் திறன் ஹரியிடம் உண்டு.
அதற்கு உதாரணம்தான், ‘அட்டக்கத்தி’, ‘மரியான்’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்கள்.
தற்போது ‘டார்லிங் 2’ டிரெய்லரில் வரும் — ஹரியின் – திக்குவாய் கதாப்பாத்திரம் வெகுவிரைவிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களை கவர்ந்து விட்டது.
“என்னுடைய ஜானி கதாப்பாத்திரம் மக்களின் மனதில் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பை பெற்று தந்தது; அதேபோல் இந்த பாலாஜி கதாபாத்திரமும் அமையும் என்று நம்புகிறேன்.
இந்த இரண்டு பாத்திரங்களும் முற்றிலும் வெவ்வேறு அம்சங்களை கொண்டது, என்னுடைய முழு திறமையையும் ‘டார்லிங் 2’ படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என்கிறார் ஹரி.