”19 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம்!”

madurai-1
6 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எளிய படமாக வந்து பலரையும் அடடே என்று பாராட்ட வைத்த ‘மதுரை டூ தேனி வழி : ஆண்டிப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகம்,
இப்போது போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பில் ‘மதுரை டூ தேனி – 2’ என்ற பெயரில் வருகிறது
இதில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள்.

இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

madurai-4
படத்தை ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.பி.எஸ்.குகன் D.F.S.C.F.Tech இயக்குகிறார்.

பாடல்களை செல்வராஜா எழுத, சரவண கணேஷ் இசையமைக்கிறார். நடனத்தை தீனா- இருசன் மேற்கொள்ள,  படத்தொகுப்பை ஆர்.ஜி. ஆனந்த் செய்கிறார்.
டெரிக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை கவனிக்கிறார். பாலு – ஜெய் கணேஷ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கின்றனர். 
போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ். ஜானகி சோணைமுத்து தயாரிக்கிறார்.
madurai-6
இணை தயாரிப்பு ஏ.வெங்கடேஷ்வரி, ஜி. ஜானகி, சத்யவாணி அனந்தகிருஷ்ணன். நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.
விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் அந்த படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதையே

 காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஷ்யங்களோடு தரவிருக்கிறது இந்தப் படம்.

madurai-5
மேலும் தமிழ்சினிமாவில் முதல் முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஒரு மிகப்பெரிய முயற்சியை,
நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தின் மூலமாக செய்யவிருக்கிறது.
இது குறித்துக் கூறும் எஸ் பி எஸ் குகன் “வருகிற மே மாதம் வெளியாகவிருக்கும் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம்.
தொடர்ந்து தமிழில் குறைந்த செலவில் தயாராகும் தரமான படங்களை இதே கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிக்கும்  வண்ணம் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

madurai-2

இந்த திட்டத்தின்படி 499 ரூபாய் கொடுத்து இவர்களிடம் ஒரு ஸ்மார்ட் கார்டு வாங்கிக் கொள்ள வேண்டும் . அது இருந்தால் பதிமூன்று படங்களை இலவசமாகவே பார்க்கலாம் .

அதன் பிறகு இந்த கார்டை அடையாள அட்டை போல பயன்படுத்தி பத்தொன்பது ரூபாய் மட்டுமே செலுத்தி படம் பார்க்கலாம் . ஐந்து வருடம் இந்த கார்டு செல்லுபடியாகும்

இந்த திட்டத்தின்படி மதுரை மாவட்டத்தில் முதன் முதலாக வெளிவர இருக்கிறது  இந்த மதுரை டூ தேனி  2″ என்கிறார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *