ரொமான்டிக் திரில்லர் ‘என்னோடு நீ இருந்தால்’

ennodu-2

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்க,

அவரது கணவர் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிப்பதோடு,  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் படம் என்னோடு நீ இருந்தால்.

நாயகியாக மானசா நாயர் நடிக்க, வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி

ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் , நெல்லை சிவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

ennodu-9

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு , டி. சிவா  இயக்குனர்  அற கே செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர் .

படத்தின் முன்னோட்டத்தையும் மூன்று பாடல்களையும் திரையிட்டனர் . பாடல்காலில் உற்சாகமாக நடித்து இருந்தார் சத்யா .

வரவேற்புரை ஆற்றிய தயாரிப்பாளர் யசோதா ” எனக்கு தாணுவைப் போல பெரிய தயாரிப்பாளர் ஆக ஆசை ” என்றார் .

ennodu-5

தாணு தன் பேச்சில் ” என்னைப் போல உயருங்கள்.  ஆனால் நான் சந்தித்த வலிகள் வேண்டாம் ” என்றார் .

தானுவை மேடையில் வைத்துக் கொண்டே தயாரிப்பாளர் சங்கத்தில் நல்ல மாற்றங்கள் வர வேண்டும் ” என்றார் டி பி கஜேந்திரன்.

இயக்குனர செல்வமணி பேசும்போது ” இப்போ மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் பணம் பற்றிய மாற்ற விசயத்தில்  கார்டு மற்றும் ஆன் லைன் மூலம் பரிமாற்றம் நடத்தினால் நமக்கு டிஸ்கவுன்ட் தர்றாங்க .

ஆனா சினிமா டிக்கட்டை மட்டும் ஆன் லைன்ல புக் பண்ணினா நாம முப்பது பர்சன்ட் அதிகமா கொடுக்க வேண்டி இருக்கு . இது என்ன நியாயம் ?

ennodu-3

ஆன் லைன்ல புக் பண்ணினா டிக்கட் விலையில் டிஸ்கவுன்ட் தரனும் ” என்றார் . சரியான கருத்து

 இயக்குனர் சத்யா பேசும்போது “நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. படம் பார்த்து பார்த்து கற்றுக் கொண்டதும், கேள்வி ஞானம், மற்றும் சினிமா பற்றி நிறைய படித்ததையும் வைத்து இயக்குனராகி இருக்கிறேன்.

அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன் ஆண்மீகம் பற்றிய புத்தகம், போதை ஒழிப்பு புத்தகம், தன்னம்பிக்கை பற்றிய புத்தகங்களை எழுதி இருக்கிறேன். நான் ஒரு புத்தக புழு.

இந்த என்னோடு நீ இருந்தால் படம் ரொமான்டிக் திரில்லர் கதைக்களம்.

ennodu-6

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாயகன் கிஷோர்,  கோடீஸ்வர பெண்ணான  பூஜாவை ( மானசா நாயர் ) காதலிக்கிறான். திடீர்ரென்று  ஒரு நாள் பூஜா  காணமல் போகிறாள்.

கிஷோர் அவளை தேடி அலைகிறான். இதற்கிடையே அவனைச்சுற்றி பல்வேறு திகைப்பூட்டும் திகில் நிறைந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன.

அந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை விறு விருப்போடு, மென்மையான காதலை கலந்து சொல்லுகிறது என்னோடு நீ இருந்தால்.

ennodu-8

படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ளன. மேலும் படத்தில் வெறும் காதலை மட்டும் கூறாமல்,

இன்றைய கால கட்டத்தில் சமூகத்திற்கு தேவையான பெரிய விழிப்புணர்வையும் கொடுக்க உள்ளோம். படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க சென்னையிலேயே நடத்தியிருக்கிறோம்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *