முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க,
13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரத்தன் மெளலி நாயகனாக நடிக்க,
மும்பையில் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்ற, 
கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்ற மஞ்சு தீக்ஷித் நாயகியாக அறிமுகமாக,
இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ நடிக்க, இவர்களுடன் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ், அம்சவேலு ஆகியோர் நடிக்க,
வசனம் எழுதி வெங்கி நிலா என்பவர் இயக்கும் படம் மல்லி .
ஒளிப்பதிவு : PKH தாஸ். இவர் கனனடத்தில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர்.
இசை : தினேஷ் – பஷீர்
பாடல்கள் : புலவர் சிதம்பரனாதன், பாண்டிதுரை
பாண்டித் துரை 21 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியவர் .
தயாரிப்பாளர்கள் ரேணுகாவும் ஜெகதீஷும் கன்னடர்கள் . கர்நாடகாவில் வாழ்பவர்கள்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டங்களையும் பாடல்களையும் திரையிட்டனர் . 
காதல் , நட்பு , பேய் பங்களா , அரண்மனை காட்சிகள் என்று வித்தியாசமாக இருந்தன .
பாடல்கள் இனிமை .
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல்களை தயாரிப்பாளர் தேனப்பனும் அபிராமி ராமநாதனும் இயக்குனர் பேரரசுவும் வெளியிட்டனர .
சிறு படங்களின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார் அபிராமி ராமநாதன் . படக்குழுவை வாழ்த்தினார் தேனப்பன் .
”கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வராவிட்டாலும் தயாரிப்பாலர்களாவது வருவது சந்தோசம் ” என்றார் பி ஆர் ஓ யூனியன் பொருளாளர் விஜயமுரளி .
” ஆமாம் . முதல்வரை தருவார்கள் . சூப்பர் ஸ்டார்களை தருவார்கள் . ஆனால் தண்ணீர் தர மாட்டார்கள் .
காவிரியை தர மாட்டர்கள் . ஆனால் காவேரி என்று பெண் இருந்தால் மட்டும் கதாநாயகியாக தருவார்கள் ” என்றார் பேரரசு .
ஹீரோ ரத்தன் மவுலி பேசும்போது ” படத்தின் படப்பிடிப்பு ஆரணியில் நடைபெற்றபோது கர்நாடகாவில் தமிழருக்கு எதிரான போராட்டம் வலுத்து ,
தமிழ் நாட்டைச் சேர்ந்த ஐம்பது கே பி என் நிறுவன பேருந்துகளை கர்நாடகாவில் எரித்தார்கள் . 
தயாரிப்பாளர்களுக்கு பத்திரமாக கர்நாடகா போய் சேருவோமா என்ற பயம் .
நாங்கள் அவர்கள் கார்களின் பதிவு எண்களை எல்லாம் தமிழ் நாட்டு வண்டிகள் போல போலியாக மாற்றி ஒட்டி பத்திரமாக அனுப்பி வைத்தோம் ” என்றார் . ( ஹா ஹா ஹா)
படத்தின் இயக்குனர் வெங்கி நிலா பேசும்போது ” தன் காதலி மஞ்சு தீக்ஷித்துடன் உயிருக்கு பயந்து ஓடும் ரத்தன் மெளலி,
காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழந்தடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறான்.
அங்கே நடக்கும் திகில் சம்பவங்களே கதை. மரணத்துக்கு பிறகும் தொடரும் நட்புதான் படத்தின் அடிநாதம்
படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது .
அரண்மனை செட்டப் என்று வித்தியாசமாக முயன்று உள்ளோம் ” என்றார் .
